ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்திக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முஃப்தியின் பாஸ்போர்ட் கடந்த 2019-ம் ஆண்டு காலாவதியானது. இதையடுத்து, அதை புதுப்பிக்க அவர் விண்ணப்பித்தார். அவரது தாயும் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், இவர்களுக்கு எதிரானஅறிக்கை ஒன்றை காஷ்மீர் போலீஸார் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் இவர்களுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தனக்கு விரைந்து பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மெகபூபா வழக்கு தொடர்ந்தார். இந்த மனு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க மிகவும் தாமதம் செய்யப்படுவதாகவும், இதுகுறித்து அரசுதரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மெகபூபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
» காளையார்கோவிலில் பாண்டியன் கோட்டையில் கீறல் குறியீடுகளுடன் பானை ஓடுகள் கண்டெடுப்பு
» ஒடிசா | ரயில் விபத்து நடந்த பகுதியில் மீண்டும் ரயில் இயக்கம் தொடக்கம்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
அவரது வேண்டுகோளை மறுபரிசீலனை செய்யுமாறு, ஜம்முகாஷ்மீர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம்.சிங், மெகபூபாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
டெல்லி நீதிமன்றத்தில் நடந்த நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு,மெகபூபா முஃப்திக்கு, 10 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது 2023 ஜூன் 1 முதல் 2033 மே 31 வரை செல்லுபடியாகும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago