பாஜக அரசு அறிமுகப்படுத்திய பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை இந்திய தேசத்தைப் பாழாக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ஓபிசி தலைவர் அல்பேஷ் தாக்கூர் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார். அதைத் தொடர்ந்து காந்தி நகரில் அவர் நடத்திய பேரணியில் கலந்துகொண்ட ராகுல், பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை குறித்துப் பேசினார்.
அப்போது அவர், ''பண மதிப்பு நீக்கத்தைக் கொண்டுவந்து மோடி இந்தியப் பொருளாதாரத்தையே அழித்துவிட்டார். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. புதிதாக ஜிஎஸ்டியைக் கொண்டு வந்து சிறு, குறு தொழில்களையும் தொழிலதிபர்களின் வாழ்க்கையையும் தடம்புரளச் செய்துவிட்டார்.
எங்களின் அனைத்து ஆலோசனைகளையும் புறந்தள்ளிய மத்திய பாஜக அரசு, நள்ளிரவில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது. அதிகபட்ச வரி 28% மற்றும் 3 ரிட்டர்ன் ஃபார்ம்களுடன் பாஜக, ஜிஎஸ்டியை 'கப்பர் சிங் டேக்ஸ்' ('ஷோலே' படத்தின் எதிர்மறை கதாபாத்திரம்) ஆக மாற்றிவிட்டது.
குஜராத்தில் 30 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆளும் பாஜக அரசு அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தராததே இதற்குக் காரணம்.
இன்று குஜராத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினரும் பாஜகவின் மீது கோபத்தில் இருக்கின்றனர். உங்களால் (பாஜக) ஹர்திக் படேலின் குரலையோ, ஜிக்னேஷ் மேவானி அல்லது அல்பேஷ் தாகூரின் குரலையோ அமைதிப்படுத்த முடியாது. ஏனெனில் அவர்களின் குரல் மக்களின் குரல்'' என்றார் ராகுல் காந்தி.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago