பாலசோர்: ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என ஒடிசாவில் பிரதமர் மோடி கூறினார்.
ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி நேற்று ஒடிசா சென்றார். ரயில் விபத்து மீட்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்தினார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட, பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகாநகா பஜார் நிலையத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் சென்றார். விபத்து நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பார்வையிட்டார். பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த பயணிகளை சந்தித்து நலம் விசாரித்தார். அங்கிருந்து அமைச்சரவை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருடன் பேசினார். காயம் அடைந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒடிசா ரயில் விபத்து மிகவும் வேதனையான சம்பவம். இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைஅளிக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரச அளிக்கும். இது மிக மோசமான விபத்து என்பதால், இது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்கள், கடுமையாக தண்டிக்கப்படுவர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago