ரயில்வே துறை வரலாற்றில் மிகவும் மோசமான விபத்துகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒடிசா விபத்து, ரயில்வே துறை வரலாற்றில சுதந்திரத்துக்குப் பிறகு நிகழ்ந்த மிகவும் மோசமான விபத்துகளில் ஒன்று என புள்ளிவிவரம் கூறுகிறது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இது ரயில்வே துறை வரலாற்றில சுதந்திரத்துக்குப் பிறகு நிகழ்ந்த மிகவும் மோசமான விபத்துகளில் ஒன்று என புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு முன்பு நிகழ்ந்த மோசமான விபத்துகள்:

1964 டிசம்பர் 23: ராமேஸ்வரம் புயல் காரணமாக பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியதில் 126 பேர் உயிரிழந்தனர்.

1981 ஜூன் 6: பிஹார் மாநிலம் பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை கடக்கும்போது நிகழ்ந்த ரயில் விபத்தில் 750-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1995 ஆகஸ்ட் 20: உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த களிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மீது புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 305 பேர் உயிரிழந்தனர்.

1998 நவம்பர் 26: பஞ்சாபின் கன்னா பகுதியில் பிரன்டீர் கோல்டன்டெம்பிள் மெயிலின் தடம்புரண்ட 3 பெட்டிகள் மீது ஜம்மு டாவி-சீல்டா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.

1999 ஆகஸ்ட் 2: மேற்கு வங்கமாநிலம் கைசால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவாத் அசாம் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பிரம்மபுத்ரா மெயில் மோதிய விபத்தில் ராணுவம், துணை ராணவ வீரர்கள் உட்பட 285 பேர் உயிரிழந்தனர்.

2002 செப்டம்பர் 9: பிஹார் மாநிலம் ரபிகஞ்ச் நகருக்கு அருகே தாவே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது சென்ற ஹவுரா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2010 மே 28: மேற்கு வங்க மாநிலம் ஜார்க்ரம் அருகே தடம்புரண்ட ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

2016 நவம்பர் 20: உத்தர பிரதேச மாநிலம் புக்ராயன் நகரில் இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸ் ரயிலின்14 பெட்டிகள் தடம் புரண்டதில் 152 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்