புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சியினர், இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்: விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்துக்கு யார் பொறுப்பு என்பது அறியப்பட வேண்டும். இந்த விபத்து தொடர்பாக பிரதமரும், ரயில்வே அமைச்சரும் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும்.
சாகேத் கோகலே, செய்தித்தொடர்பாளர், திரிணாமுல் காங்கிரஸ்: இந்தச் சம்பவத்தை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். தொழில்நுட்பக் கோளாறு இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்துத் தொடர்பாக நிறைய கேள்விகள் உள்ளன. உரிய பதில் வழங்கப்பட வேண்டும்.
பினாய் விஷ்வம், நாடாளு மன்ற உறுப்பினர், சிபிஐ: மத்திய அரசு சொகுசு ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சாமானிய மக்களுக்கான ரயில்களும் அவற்றின் தடங்களும் புறக்கணிக் கப்படுகின்றன. ஒடிசா ரயில் விபத்து அதற்கு ஓர் உதாரணம். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்.
» Odisha Train Accident | ஒடிசாவில் இருந்து தமிழக பயணிகளுடன் சிறப்பு ரயில் சென்னை வந்தடைந்தது
» 'பூண்டு ரசம் கிடைக்குமா?' - தோனி குறித்து செஃப் பகிர்ந்த நிஜக்கதை
தீபங்கர் பட்டாச்சார்யா, பொதுச் செயலர், சிபிஐ (எம்எல்): ரயில்வேயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அம்சங்கள் எதுவும் இல்லையா? இத்தகைய விபத்துகள் இனி தொடர்ந்து நிகழுமா? பதில் தெரியப்பட வேண்டிய கேள்விகள் இவை.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago