பாலசோர்: ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது. யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகளின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகி எதிர் பாதையில் விழுந்ததாக ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
சரக்கு ரயில் உடன் ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 7 - 8 பெட்டிகள் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரத்தில் இதே எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் வந்துள்ளது. அதனை நிறுத்த முடியாத நிலையில்தான் ஏற்கனவே தடம் புரண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்து ஏற்பட யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 - 3 பெட்டிகள் தடம் புரண்டன.
» கோரமண்டல் ரயில் விபத்து | ஒடிசாவில் 3 ரயில்கள் மோதியது எப்படி; தமிழ் பயணிகள் நிலை என்ன?
» கோரமண்டல் ரயில் விபத்து | உயிரிழப்பு 207 ஆக அதிகரிப்பு; 900+ காயம்
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்தனர். அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் இருந்து கிரேன்களும் வரவழைக்கப்பட்டு, துரித கதியில் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரவிலும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது.
பாலசோர் மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். மருத்துவக் குழுக்களும் விரைந்துள்ளன. அங்குமுகாம்கள் அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரயில்வே உயர் அதிகாரிகளும் சென்று, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று ரயில்வே சிறப்பு மீட்பு பணி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 233-பேர் உயிரிழந்துள்ளனர்., 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதம் அதிகமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் பாலசோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் வனப்பகுதி என்பதால் மீட்பு, நிவாரணப் பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. விபத்து காரணமாக அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒடிசா முதல்வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர்.
தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்பு?: விபத்துக்குள்ளான இரண்டு பயணிகள் ரயிலும் தமிழகம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் என்பதால் தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்புள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டும் 850 பேர் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் தமிழர்கள் அதிகம் பாதிப்படையவும் வாய்ப்புள்ள அச்சம் நிலவி வருகிறது.
மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஒடிசா செல்கின்றனர். அவர்களுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மூவரும் செல்ல உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவசர எண்கள் அறிவிப்பு: விபத்து குறித்து தகவல் அறிய, சிறப்பு மீட்பு படை அலுவலகத்தின் அவசர எண் வழங்கப்பட்டுள்ளது. 6782262286 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் விவரம் அறிய 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என ரயில்வே மீட்பு பணி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago