ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஷிகோ ஹாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 10 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்த போது ஷிகோஹாபாத் மெயின்புரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், மெயின்புரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டது.
பின்னர் அக்டோபர் 1989-ல்ஃபிரோசாபாத் மாவட்டம் உருவான பிறகு, ஷிகோஹாபாத் ஃபிரோசாபாத் மாவட்டத்தின் பகுதியாக மாறியது. ஆனாலும், இந்த வழக்கின் விசாரணை மெயின்புரி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதனிடையே கடந்த 2021-ம்ஆண்டு இந்த வழக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்ந்து 42 ஆண்டுகளைக் கடந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் இறந்துவிட்டனர்.
எஞ்சியிருந்த கங்கா தயாள் (90) மட்டும் விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்டு வந்தார்.
» கோரமண்டல் ரயில் விபத்து | ஒடிசாவில் 3 ரயில்கள் மோதியது எப்படி; தமிழ் பயணிகள் நிலை என்ன?
» கோரமண்டல் ரயில் விபத்து | உயிரிழப்பு 207 ஆக அதிகரிப்பு; 900+ காயம்
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கங்கா தயாள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், கங்கா தயாளுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று மாவட்ட நீதிபதி ஹர்வீர் சிங் தீர்ப்பு அளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago