புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் இயற்கையாக உருவான மணல் மேடுகளை அதன் பொலிவு மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்றுஇயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி அடுத்துள்ள கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு முதல் மூர்த்திக்குப்பம் வரை இயற்கையாக உருவான ‘வம்பா மேடுகள்’ என அழைக்கப்படும் மணல் மேடுகள் நீண்டுள்ளன. கடற்கரையில் இருந்து 500 அடிக்கு அப்பால் சுமார் 60 அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்துள்ள இந்த மணல் மேடுகள், முந்தைய காலங்களில் மக்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக திகழ்ந்துள்ளன.
இங்கு வளர்ந்துள்ள தாழை மரங்கள் மணல் மேடுகளுக்கு வலு சேர்க்கிறது. பனை, சவுக்குஉள்ளிட்ட மரங்களாலும் மணல்இறுகப் பிடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இப்படி இயற்கை சூழ்ந்த இந்த மணல் மேடுகள் படிப்படியாக அழிந்து வருகிறது.
ஆக்கிரமிப்புகளாலும் மணல் மேடுகள் கரைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வம்பாமேடு மற்றும் பிள்ளையார்குப்பம்-மணப்பட்டு செல்லும் சாலையில் இந்த இயற்கை மணல் மேடுகளை சிலர் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு கரைத்து,சமன் செய்து ஆக்கிரமித்துள்ளனர். இதோடு சவுக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை நட்டு வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக இயற்கை அரணாக திகழ்ந்த இந்த மணல் மேடுகளின் அழகும் பொலிவிழந்து வருகிறது.
இதுபற்றி இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது," பல நூறு ஆண்டுகள் பழமையான இயற்கையாக உருவான வம்பா மேடுகள், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மணல் மேடுகளில் இருந்து மணல் திருட்டுகள் நடைபெற்றன. பிறகு அது தடுக்கப்பட்டது.
தற்போது மணல் மேடுகளை தனி நபர்கள் சிலரின் ஆக்கிரமிப்பால் கரைக்கப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மணல்மேடுகள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. இயற்கையாக உருவான இந்த மணல் மேடுகளில் மணல் அள்ளக் கூடாது. மேடுகளை கரைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை யாரும் பொருட்படுத்துவதில்லை. மணல் மேடுகள் கரைக்கப்படுவது தொடராமல் தடுப்பதோடு, பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்"என்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
17 days ago