இன்று உலக ஆமைகள் தினம் | ஆமைகள் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலான மடிவலை மீன்பிடி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழக கடற்கரையில் அதிகபட்சம் 4 வகை கடல் ஆமைகள் உள்ளன. இதில் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்ய பங்குனி ஆமைகள் வருகின்றன. இதுபோக சிற்றாமை, பச்சை ஆமை, மென் ஓட்டு ஆமை போன்றவையும் உள்ளன.

நாட்டின் கிழக்கு கடற்கரையில் ஒடிஷாவில் தொடங்கி கன்னி யாகுமரி வரை ஆமைகள் பரவலாக இனப்பெருக்கம் செய்கின்றன. ஆமை இனங்கள், அதன் தாய் எந்தக் கடற்பகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கிறதோ அதிலிருந்து வரக்கூடிய குஞ்சுகளும், தான் குஞ்சு பொறித்த (பிறந்த இடம்) கடற்கரை பக்கமே வந்து இனப் பெருக்கம் செய்கின்றன. கடலுக்குள் எந்த இடத்தில் ஆமைகள் சுற்றித் திரிந்தாலும் திரும்பி அந்தக் கடற்கரைக்கே வந்து முட்டையிட்டுச் செல்கின்றன.

இது குறித்து மதுரை திரு மங்கலத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் ரவீந்திரன் நடரா ஜன் கூறியதாவது: கடல் ஆமைகள் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் முடிய கடற்கரைக்கு முட்டையிட வந்து செல்கின்றன.

கடல் ஆமைகளைப் பாதுகாக்க நம்முடைய மீன்பிடி முறையை மாற்ற வேண்டும். மீனவர்கள் மடி வலைகளைப் பயன்படுத்துவதால் ஆமைகளுக்கான உணவாக இருக்கக்கூடிய கடல்வாழ் உயிரி னங்களான கடற்பஞ்சு, கடற் பாசிகள், பவளப் பாறைகள் அழிக்கப்படுகின்றன.

அதனால், தொடர்ந்து இந்த கடற்கரை பகுதிகளில் இனப் பெருக்கம் செய்யக்கூடிய உயிரி னங்கள் அழிந்து விடுகின்றன. இந்த உயினங்களுக்கு உணவு பிரச்சினையும் ஏற்படுகின்றன. எனவே, மடி வலையை மீனவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்தேசிய பூங்கா உள்ளது. இங்கு ஆமைகளை மீட்டெடுக்க தமிழக வனத் துறை மூலமாக அதிகமான இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஆமைகளின் முட்டைகளைச் சேகரித்து செயற்கை முறையில் முட்டையைப் பொறிக்க வைத்து பாதுகாப்பாக திரும்ப கடலில் கொண்டு போய்விடுகிறார்கள். ஒரு ஆமை 80 முதல் 125 முட் டைகள் இடுகின்றன.

கடலில் அதிகப்படியாகக் கொட்டக்கூடிய பிளாஸ்டிக் கழிவு களை உட்கொள்வது, மீன்பிடி வலைகளை தூக்கி எறிவதால் அதன் கால் வலைகளில் சிக்கி உயிர் இழப்பதும் ஆமைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல்களாக உள்ளன.

கடல் ஆமைகளின் புகலிடமாக ராமேசுவரம் கடற்பகுதிகள் உள்ளன. அங்குள்ள அரிச்சல் முனை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதியாக உள்ளது. அவர்கள், கேளிக்கை பகுதியாக அதை மாற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் குப்பையைக் கொட்டுகிறார்கள்.

அதனால், தெரு நாய்களும், காகங்களும் பெருகி அந்த கடற்பகுதிகளில் முட்டையிட வரக் கூடிய ஆமைகளை தாக்குகின்றன. கடல் ஆமைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து மடி வலை மீன்பிடிப்பைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக ஆமைகள் தினத்தில் நாம் ஒவ்வொருவரும் ஆமைகளைப் பாதுகாப்போம் என உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்