திருப்பத்தூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 2 யானைகள் பிலிக்கல் காப்பு காட்டில் விடுவிப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 2 யானைகள், பிலிக்கல் காப்புக் காட்டில் விடப்பட்டன. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து 2 ஆண் யானைகள் கடந்த மார்ச் மாதம் வனப்பகுதியில் இருந்து வெளியேறின.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றித் திரிந்த இந்த இரு யானைகள், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி பாரூர் அருகே காட்டுக்கொலை கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார், ஏப்ரல் 21-ம் தேதி, தருமபுரி வட்டகானம்பட்டி ஏரிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் (70), ஏப்ரல் 27-ம் தேதி காரிமங்கலம் பெரிய மொரசுப்பட்டியை சேர்ந்த வேடி (52) ஆகியோரை தாக்கி கொன்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 6-ம் தேதி கிருஷ்ணகிரி நகருக்குள் புகுந்த யானைகள், 7-ம் தேதி காலை சாமந்தமலையில் பெருமாள் என்பவரை தாக்கி கொன்றன.

பின்னர், ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட இரு யானைகள், கடந்த 12-ம் தேதி அங்கு ஒரு பெண் உட்பட இருவரை தாக்கி கொன்றன.

அங்கிருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தன. நேற்று முன்தினம் திருப்பத்தூர் அருகே திப்பசமுத்திரம் ஏரியில் இருந்த 2 யானைகளையும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர்.

பின்னர், யானைகள் லாரியில் ஏற்றப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட பிலிக்கல் காப்புக் காட்டில் நேற்று விடப்பட்டன.

லாரியில் இருந்து இறங்கியதும் 2 யானைகளும், வனப்பகுதிக்குள் சென்றன. இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், யானைகள் காட்டிற்குள் விடப்பட்டதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

மேலும்