தமிழக - ஆந்திர எல்லையில் நடமாடும் யானைகள் கூட்டம்

By செய்திப்பிரிவு

குடியாத்தம்: வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையொட்டிய கவுன்டன்யா வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் உள்ளது. ஆந்திர மாநில கட்டுப்பாட்டில் உள்ள யானைகள் சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் அடங்கிய கூட்டம் உள்ளது.

இவற்றில் சில யானை கூட்டங்கள் அவ்வப்போது தமிழக எல்லையோரம் உள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநில எல்லையில் உள்ள சைனகுண்டா பகுதியில் வனத்துறை சோதனைச்சாவடி அருகேயுள்ள மொசலமடுகு பகுதியில் குடியாத்தம் - பலமனேரி சாலையை 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக கடந்து சென்றுள்ளன.

இதனால், சிறிது நேரம் குடியாத்தம் - பலமனேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலறிந்த வனத்துறையினர் யானைகள் கூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

18 hours ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

29 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்