புதுடெல்லி: இந்தியாவின் சதுப்பு நிலப்பரப்பு 26 என்ற எண்ணிக்கையில் இருந்து 75 ஆக தற்போது அதிகரித்துள்ளது.
ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சதுப்பு நிலப்பரப்பைக் கொண்டது இந்தியா. இந்த நிலங்கள் பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றங்கள், நன்னீர் கையிருப்பு மற்றும் மனிதர்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இயற்கை சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இந்தியா தற்போது 1.33 மில்லியன் ஹெக்டேர் பரப்புடன் கூடிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 75 சதுப்புநிலங்களைக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 1982-ம் தேதி முதல் 2013-ம் ஆண்டு வரை இந்தியாவில் 26 சதுப்புநிலங்கள் மட்டுமே இருந்தன. இதன்பின் 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 49 புதிய சதுப்பு நிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 2022ம் ஆண்டு மட்டும் மொத்தம் 28 நிலப்பகுதிகள் சதுப்பு நிலப்பரப்பாக அறிவிக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை அதன் இயற்கைத்துவம் மாறாமல் நிர்வகித்து பாதுகாப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக காலநிலை சார்ந்த இலக்குகளுடன் கூடிய நீடித்த வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த மேம்பாட்டு இலக்குகளை வகுத்துக்கொண்டு இந்தியா வெற்றி கண்டு வருகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
18 mins ago
சுற்றுச்சூழல்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
சுற்றுச்சூழல்
11 hours ago
சுற்றுச்சூழல்
13 hours ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago