மே.1 முதல் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ‘புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. எம்எல்ஏ-க்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் செல்வம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "புதுச்சேரி அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் தூக்குப் பைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள், விரிப்பான்கள், தெர்மோக்கோல் குவளைகள், தெர்மோக்கோல் தட்டுகள், உணவுப் பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய் மற்றும் ஐஸ் கிரீம், தெர்மோக்கோல் அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக் முட்கரண்டி, சிறிய பேக்கேஜிங் போர்த்திய தாள்கள், இனிப்புப் பெட்டிகள் மற்றும் அழைப் பிதழ் அட்டைகளை சுற்றிய பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளெக்ஸ் பேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

ஆகையால் புதுச்சேரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு சட்டப்பேரவை அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 14 வகையான பொருட்களை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே ஒன்றாம் தேதி முதல் பயன்படுத்தக்கூடாது. எம்எல்ஏ-க்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

மேலும்