வைகை ஆற்றில் கழிவு நீர்: ரூ.2 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும் பயன் கிட்டியதா?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கோரிப்பாளையம் வைகை கரையில் ரூ.2 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும் எந்தப் பயனும் இல்லாமல் தொடர்ந்து வைகை ஆற்றில் கழிவு நீர் கலந்து வருவதை கவனிக்க முடிகிறது.

மதுரையை ஒரு காலத்தில் வளமாக்கிய வைகை ஆறு, தற்போது கழிவு நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கிறது. முன்பு நகர் பகுதியில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் வைகை ஆற்றில் கலந்தது. தற்போது ஒரளவு குறைந்து இருந்தாலும் நிரந்தரமாக வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையால் தடுக்க முடியவில்லை. வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் ஆற்று தண்ணீர் தூர்நாற்றம் வீசுவதோடு மதுரையின் நிலத்தடி நீர் மட்டமும் மாசு அடைந்துள்ளது.

சமீபத்தில் வைகை ஆற்றை ஆய்வு செய்த மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஆற்றில் எந்தளவுக்கு மாசு அடைந்துள்ளது என்பதை வெளியிட மறுக்கிறது. மாநகராட்சியும் வைகை ஆற்றை அன்றாடம் தூய்மைப்படுத்தும் இடங்களுக்கான பட்டியலில் சேர்க்கவில்லை. முன்போல், அவ்வப்போது நடக்கும் விழிப்புணர்வு மெகா தூய்மைப் பணியும் நடக்கவில்லை. சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆற்றின் துயரத்தை பார்த்து வெதும்பி போய் அவர்களே மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி வைகை ஆற்றில் முடிந்தளவு தூய்மை செய்கின்றனர்.

இந்நிலையில், வைகை ஆற்றில் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன் செல்லூர் பந்தல் குடி கால்வாயை ஓட்டி வைகை கரை ஓரத்தில் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ரூ.2 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தது. செல்லூர், மீனாட்சிபுரம், ஆணையூர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்தது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பிரமாண்டமாக அமைக்காமல் தினமும் 2 எம்எல்டி கழிவு நீரை மட்டுமே சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டது.

அதனால், இப்பகுதியில் எந்த நோக்கத்திற்காக சுத்திரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவடையாமல் முழுமையாக கழிவு நீரை செல்லூர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்ய முடியாமல் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மாநகராட்சி ரூ.2 கோடியில் அமைந்த செல்லூர் சுத்திகரிப்பு நிலையமும், அதற்கு ஓதுக்கிய ரூ.2 கோடி நிதியும் வீணாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனாலே, ஆழ்வார் புரம் பகுதியில் கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆணையூர், மீனாட்சிபுரம் பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முழுவதும் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. செல்லூர் மீனாட்சிபுரம் கணமாய் வரும் கழிவுநீர், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் மாநகராட்சி பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீதமாகும் தண்ணீர் வைகை ஆற்றில் திறந்துவிடுகிறோம். இந்த தண்ணீரும், தற்போது சுத்திகரிக்க முடியாமல் வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரும் சேர்ந்து வருவதால் அதிகமான கழிவுநீர் ஆற்றில் கலப்பதாக தெரியும். ஆனால், பெருமளவு கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை நிறுத்திவிட்டோம். செல்லூர் கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் சுத்திகரிக்க முடியாத கழிவு நீரை ‘பம்’ செய்து முந்திரி தோப்பில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக புதிதாக கழிவு நீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையூர், மீனாட்சிபுரம் பகுதியில் பாதாளசாக்கடை அமைத்து முடிந்ததும் வைகை ஆற்றில் நிரந்தரமாக கழிவு நீர் கலப்பதை தடுக்கப்பட்டுவிடும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

29 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்