சேலம் வனக்கோட்டத்தில் கணக்கெடுப்பு: 138 வகையான பறவையினங்கள் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் வனக்கோட்டத்தில் நடத்தப்பட்ட நிலம் வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பில், 138 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சேலம் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சஷாங் காஷ்யப் தலைமையில் 20 இடங்களிலும், ஆத்தூர் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சுதாகர் தலைமை யில் 19 இடங்களிலும், நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றது.

சேலம் வனக்கோட்டத்தில் குரும்பப்பட்டி, பண்ணிக்கரடு, வாணியார், மஞ்சவாடி, லோக்கூர், வெள்ளாளகுண்டம், ஜல்லூத்து உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகள், குரால்நத்தம், பொம்மியம்பட்டி, எஸ்.பாளையம், விநாயகம்பட்டி உள்ளிட்ட ஊரகப் பகுதிகள் என மொத்தம் 20 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. உதவி வனப்பாதுகாவலர் கண்ணன் தலைமையில் ஜல்லூத்து என்ற இடத்தில் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், சேலம் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மரகதப் புறா (தமிழகத்தின் மாநிலப் பறவை), செங்குயில், கொண்டை உழவாரன், இந்திய பெருங்கண்ணி, கொண்டை பாம்புண்ணி கழுகு, குடுமி பருந்து, கருடன், இந்திய கழுகு ஆந்தை, பூமன் ஆந்தை, பச்சை பஞ்சுருட்டான், ஆறு மணி குருவி, சூறைக் குருவி உள்ளிட்ட 138 வகை பறவையினங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை 5,726 எண்ணிக்கையில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

ஆத்தூர் வனக்கோட்டத்தில், பாறை சுண்டாங்கோழி, குடுமிக் கழுகு, வெண்வால் மாம்பழச்சிட்டு, வெண்புள்ளி விசிறி வாலி, வெண்புருவ சிலம்பன், மரகதப்புறாஉள்பட 149 வகையான பறவையினங்கள், 3,347 எண்ணிக்கையில் கண்டறியப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

29 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்