மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக் குருவி தினம் [World Sparrow Day] கொண்டாடப்படும் வேளையில், தமிழகத்தில் 100 கிராமங்களுக்கு சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கூடு கட்டும் பெட்டிகளை சீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட் வழங்குகிறது.
இது தொடர்பான செய்திக் குறிப்பு: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் [TVS Motor Company] மற்றும் சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் [Sundaram-Clayton Limited] ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு செயல்பாட்டுப் பிரிவான ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட் (Srinivasan Services Trust (SST)) சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தனது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட், சிட்டுக் குருவி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. மேலும், நாளுக்கு நாள் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு முயற்சிகளை அக்கறையுடன் எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிட்டுக்குருவிகள் அதிகம் கூடுக்கட்டும் கிராமங்களை எஸ்.எஸ்.டி. கண்டறிந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமங்களுக்கு சிட்டுக்குருவிகளுக்கு செளகரியமாக இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்ட கூடுக்கட்டும் பெட்டிகளை ஆரியகணக்கில் எஸ்.எஸ்.டி விநியோகம் செய்துவருகிறது. இந்த கூடு கட்டும் பெட்டிகளை சிட்டுக்குருவிகள் தேடி வரும் வகையில், அந்த கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்கு வெளியே ஜன்னலுக்கு மேற்பகுதியிலோ அல்லது அருகில் இருக்கும் உயரமான மேற்கூரைப் பகுதிகளிலோ போதுமான தீவனத்துடன் வைக்கப்படும். இதுவரையில், எஸ்.எஸ்.டி. ஏறக்குறைய 100 கிராமங்களுக்கு இந்த கூடு கட்டும் பெட்டிகளை விநியோகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.டி. மேற்கொண்டு வரும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஏற்கனவே நேர்மறையான நல்ல முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்த கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள கூடு கட்டும் பெட்டிகள் சிட்டுக்குருவிகளுக்கு வசிப்பிடமாக பலன் அளித்து வருகின்றன. இதனால் இந்த நடவடிக்கை சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும் என எஸ்.எஸ்.டி உறுதியாக நம்புகிறது.
இவ்வாறாக எஸ்.எஸ்.டி தொடர்ந்து மேற்கொண்டு வரும் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சிகள் அனைத்தும், பல்லுயிர்களைப் பாதுக்காக்க வேண்டியதன் அவசியம்,முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கும், அக்கறைக்கும் நல்ல சான்றுகளாக அமைந்திருக்கின்றன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
25 days ago