மின்சார வாகனங்களுக்கு மாற தயக்கம் காட்டும் மக்கள்: ஆய்வில் தகவல் 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 3 பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள் மின்சார வாகனங்கள் வாங்க தயக்கம் காட்டுவது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதன் காரணமாக மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், மின்சார வாகன கொள்கை மற்றும் அதன் பயன்பாடு குறித்து ‘க்ளைமாட் ட்ரெண்ட்’ (climate trends) என்ற அமைப்பு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

சென்னை, மதுரை, கோவை என்று 3 நகரங்களில் தனியார் வாகன ஓட்டிகள் 1,285 பேர் மற்றும் வணிக வாகன உரிமையாளர்கள் 81 பேரும் என 1366 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இதில் அதிக முன் செலவுகள், போதிய சார்ஜிங் உள்கட்டமைப்புகள் இல்லாதது உள்ளிட்டவையால் மின்சார வாகனங்களுக்கு மாற விருப்பம் இல்லாததற்கு முக்கிய காரணங்களாக உள்ளது தெரியவந்துள்ளது.

வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் மூன்று சக்கர சரக்கு வாகன உரிமையாளர்களில் நான்கில் மூன்று பங்கு பேரும், நான்கு சக்கர சரக்கு வாகன உரிமையாளர்களில் பத்தில் எட்டு பேரும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் தயக்கம் காட்டுகின்றனர். அதேநேரத்தில், இருசக்கர வாகன ஓட்டிகளில் 60 சதவீத பேர் மின்வாகனங்களுக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே மின்சார வாகனம் வைத்திருக்கும் 153 பேரில் 76 சதவீத பேர் நிச்சயமாக தங்களின் நண்பர்களுக்கு மின்சார வாகனம் வாங்க பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், 79 சதவீத பேர் சென்னை மற்றும் மதுரையில் போதிய சார்ஜிங் உள்கட்டமைப்பு இல்லாத போல் உணர்வதாக தெரிவித்துள்ளனர்

குறிப்பாக, 85 சதவீத வாடகை கார் ஓட்டுநர்கள் போதிய வாகன வகைகள் இல்லாதது மற்றும் போதிய சார்ஜிங் வசதி இல்லாமல் இருப்பது உள்ளிட்டவை மின்சார வாகனத்திற்கு மாறுவதற்கு முக்கிய தடையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்படி பல்வேறு காரணங்களால் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு சலுகைகள் அறிவித்தும் மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், "மின் வாகன பயன்பாட்டை மக்களிடம் ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவிக்கப்பட்ட பின்பு விற்பனை அதிகரித்துள்ளது.

காலநிலை மாறுபாட்டை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தாங்களாகவே மின் வாகன பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு மின்சார வாகன பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அதிகப்படியான முதலீடுகள் வரத் துவங்கியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரைக்கும் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் மின்சார வாகன சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாடுகள் அதிகரிக்கும் பொழுது சார்ஜ் செய்யும் வசதிகளும் அதிகரிக்க துவங்கும்.

அரசு சார்பில் வாங்கப்படும் வாகனங்கள் தேவைக்கு ஏற்ப மின் வாகனங்களாக மாற்றப்பட்டு வருகிறது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்களிடம் மின்சார வாகனங்களுக்கு கடன் உதவி வழங்கும்படி வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

29 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்