திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 3 காடுகளில் தண்ணீர் வற்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால், வன உயிரினங்களின் தாகத்தை தணிக்க தலா 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் தண்ணீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோடை காலம் தொடங்கு வதற்கு முன்பாகவே, வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல அதிகரித் துள்ளது. இதன் எதிரொலியாக, நீர்நிலைகள் வற்றி வரும் சூழல் உருவாகிவிட்டது. இதில், வன உயிரிழனங்கள் வாழும் காடுகளின் நிலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காடுகளில் உள்ள நீர்வீழ்ச்சிகள், குளங்கள் உள்ளிட்டவை முற்றிலும் வற்றி விட்டது. இதனால், தாகத்தை தணிக்க தண்ணீரை தேடி, காடு களில் இருந்து வன உயிரினங்கள் வெளியேறும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதை தடுக்கும் முயற்சியில் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை ஈடுபட்டுள்ளது.
திருவண்ணாமலை வனச் சரகத்துக்கு உட்பட்ட அடி அண்ணாமலை காப்புக்காடு (மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை), கவுத்தி - வேடியப்பன் மலை காப்புக் காடு மற்றும் சொரகொளத்தூர் காப்புக்காடு என 3 காப்புக்காடுகளில் தண்ணீர் வற்றி வறட்சி நிலவுகிறது. காடுகளில் வாழும் வன உயிரிழனங்களின் தாகத்தை தணிக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி, வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் மேற்பார்வையில் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டுள்ளன.
3 காப்புக்காடுகளில், 54 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. முதற்கட்டமாக, அடி அண்ணா மலை மற்றும் சொரகொளத்தூர் காப்புக்காடுகளில் உள்ள தொட்டில் தண்ணீர் நிரப்பும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதன்மூலம், காடுகளில் இருந்து வன உயிரி னங்கள் வெளியேறுவதை கட்டுப் படுத்தலாம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் கூறும்போது, “மூன்று காப்புக்காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி, குரங்கு, உடும்பு, குள்ளநரி கீரிப்பிள்ளை, பாம்பு என லட்சத்துக்கும் மேற் பட்ட உயிரினங்கள் வாழ்ந்து வரு கின்றன. மழை காலம் முடிந்து விட்டதால், காடுகளில் உள்ள குளங்கள் வற்றின. இதனால், வனத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள குளங்களில் தண்ணீர் நிரப்பப் படுகிறது.
குளங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, தண்ணீர் குறைந்ததும் டேங்கர் லாரி மூலமாக உடனுக்குடன் நிரப்பப்படும். இதன்மூலம் வன உயிரினங்களின் தாகத்தை தணிக்க முடியும். மேலும் காடுகளில் இருந்து வன உயிரினங்கள் வெளியேறுவதை தடுக்கலாம். பருவ மழை மீண்டும் தொடங்கும் வரை, காடுகளில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி தொடரும்.
காடுகளில் நுழையக்கூடாது: காடுகளின் உள்ளே மக்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது. கோடை காலம் என்பதால், காடுகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதற்கு, மனிதர்களின் செயல்களும் பிரதான காரணமாக உள்ளது. தீ பற்றி எரிவதால் வன உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. மக்களும் பாதிப்பை ஏற்படுத்தும். அனுமதி யின்றி காடுகள் உள்ளே நுழைந் தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
17 mins ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுச்சூழல்
23 hours ago
சுற்றுச்சூழல்
23 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
10 days ago