பேரூர் பெரிய குளக்கரையில் மருத்துவ கழிவை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், “கோவை பேரூர் பெரிய குளக் கரையில் பல்வேறு மரக்கன்றுகளை அடர்வன முறையில் நட்டு பராமரித்து வருகிறோம்.

இந்நிலையில், குளக்கரையில் நேற்று மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து பேரூர் பேரூராட்சியில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்து, அங்கிருந்த நிறுவனத்தின் பெயர் பதிவு செய்யப்பட்ட ரசீதுகளை ஒப்படைத்திருந்தோம். பேரூராட்சி செயல் அலுவலர் கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

சுற்றுச் சூழலுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய மருத்துவக் கழிவுகளை நீர் நிலைகள் போன்ற பொது இடங்களில் கொட்டிய நிறுவனத்தின் மீது காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அதிகபட்ச அபராதத் தொகையை விதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE