பழநி: பழநியில் வனத் துறை சார்பில் நடத்திய பறவைகள் கணக்கெப்பில் 80 வகை பறவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
கொடைக்கானல் வனக்கோட்டமான பழநியில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வனப் பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். பழநி அருகேயுள்ள பாலாறு பொருந்தலாறு அணை பகுதி, கலிக்கநாயக்கன்பட்டி குளம், கோதை மங்கலம் பகுதியில் உள்ள நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
அதில் 80 வகையான அரிய பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது, அந்த பறவைகளின் விபரங்களை தொகுத்து அரசுக்கு அனுப்பி வைக்கும் பணியில் வனத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.
» கடைகளில் குட்கா, பான் மசாலாவை விற்காதீர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
» “தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக குடியரசுத் தலைவர் உரை” - முத்தரசன் விமர்சனம்
பழநி வனச்சரகர் பழனிக்குமார் கூறுகையில், ''பழநிக்கு வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் இனப்பெருக்கத்திற்காக பறவைகள் வந்து செல்கின்றன. பழநி வனப்பகுதிகைளை பாதுகாப்பதில் இந்த பறவைகளும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே அவற்றைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை உண்டு'' என்றார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
21 days ago
சுற்றுச்சூழல்
24 days ago