பொள்ளாச்சி: வால்பாறையில் இந்தாண்டுக்கான பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் அரிய வகை பறவைகள் காணப்படுகின்றன. பொங்கல் தினத்தன்று பறவைகளை பார்த்து பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடக்கிறது.
இது குறித்து வால்பாறையில் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் செல்வகணேஷ் கூறியதாவது: தமிழகத்தில் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க ஆண்டு தோறும் பொங்கல் நாட்களில் நடத்தப்படுவதே பொங்கல் பறவை கணக்கெடுப்பு.
ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பொங்கல் நாட்களில் இப்பறவை கணக்கெடுப்பு நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்புற பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. பறவைகள் கணக்கெடுப்பில் அதிகமாக பதிவு செய்யப்பட்ட பறவைகளில் முதல் 10 இடத்தில் காகம், மைனா, கரிச்சான் குருவி, பச்சைக்கிளி, மடையான், அண்டங்காக்கை, வெண் மார்பு மீன் குத்தி, பனை உழவாரன், மணிப்புறா ஆகியன இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
22 days ago
சுற்றுச்சூழல்
24 days ago