5 நாட்களுக்கு ஒருமுறை புத்தாண்டு கொண்டாடும் புதிய கோள் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அண்மையில்தான் புது வருடமான 2023-ம் ஆண்டு பிறந்தது. பூமிக் கோள் மீண்டும் சூரியனை முழுவதுமாக சுற்றி முடிக்க இன்னும் 361 நாட்கள் ஆகும். அதன் பிறகே அடுத்த புத்தாண்டு பிறக்கும். இந்த சூழலில் 5 நாட்களுக்கு ஒரு முறை புத்தாண்டு பிறக்கும் புதிய கோள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்தான் இதனை கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 530 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கோள் அமைந்துள்ளது. வியாழனை விட மூன்று மடங்கு பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இது உள்ள காரணத்தால் 5 நாட்களுக்குள் ஒரு சுற்றை நிறைவு செய்ய முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சுமார் 1.93 பில்லியன் ஆண்டுகள் பழமையானது மற்றும் 6,700 முதல் 6,800 கெல்வின் மேற்பரப்பு வெப்பநிலையை உத்தேசமாக இது கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆராய்ச்சி குறித்த முடிவுகள் arxiv எனும் தளத்தில் வெளியாகி உள்ளது. நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோ பிளானட் சர்வே சாட்டிலைட் (TESS) மூலம் இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE