மேற்குத் தொடர்ச்சி மலையில் நீரூற்றுகளால் உருவாகிய ஓடைகள்

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஓடைகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மலைப்பகுதியில் ஏற்பட்ட நீரூற்றுகளால் புதிய ஓடைகள் உருவாகி உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மின்வெட்டிப்பாறை அருவி, சறுக்குப்பாறை அருவி, பேச்சியம்மன் கோயில், யானை பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைகளில் தொடர்ச்சியாக நீர்வரத்து உள்ளது.

மலைப் பகுதியில் உருவாகியுள்ள நீரூற்றுகளின் காரணமாக பல இடங்களில் புதிதாக ஓடைகள் உருவாகி உள்ளன. இதனால் மலையடிவாரத்தில் உள்ள ஆறுகள், கண்மாய்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE