சேலம் | கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் பத்திரமாக மீட்பு

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அருகே கிணற்றல் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கேத்து நாயக்கன்பட்டி புதூரில் ராஜசேகர் (43) என்பவருக்குச் சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்து கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து ராஜசேகர் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, 40 அடி ஆழ கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆண் புள்ளி மானை பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் மீட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்ட புள்ளிமானை பொம்மிடி பிரிவு வனவர் செல்வராஜ் மற்றும் வனத்துறை அலுவலர்களிடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர். தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் கிணற்றில் விழுந்துள்ளது தெரியவந்தது. இரண்டு வயதான மானை வனத்துறையினர் காப்புக் காட்டுக்குள் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

மேலும்