ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே 40 யானைகள் சாலையை கடந்து செல்ல வசதியாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான ஜவளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 40-க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பல்வேறு கிராமங்கள் வழியாக இடம் பெயர்ந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்தன.
முன்னதாக யானைகள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா வனப்பகுதியில் சாலையை கடந்து சென்றன. அப்போது அப்பகுதியில் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி யானைகள் பாதுகாப்பாக செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத் தனர். யானைகள் கடந்து சென்ற பிறகு வாகனப் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
மக்களுக்கு எச்சரிக்கை: தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையி லான வனஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும், வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம், யானைகள் நடமாட்டம் தெரிந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என கிராம மக்களுக்கு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
10 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
10 days ago