நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்துக்கு ரூ.7.5 கோடி நிதி: தமிழக அரசு உத்தரவால் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் பகுதியில் 420 ஏக்கரில் நஞ்சராயன் குளம் உள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருப்பதாலும், ஆள் அரவமற்ற பகுதியாக இருப்பதாலும் பறவைகளின் வாழ்விட பிரதேசமாக உள்ளது.

ஜரோப்பா, ரஷ்யா, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சேன்ட் பைபர், கிரீன் ஹெரான், யூரேசியன் பார்பில்,கிரேவாக் டெய்லர், டார்டர், ஸ்பூன்பில், கார்க்கினி, கூழைகடா உள்ளிட்ட பறவைகள் இங்கு ஆண்டுதோறும் வலசை வருகின்றன.

உலகிலேயே அதிக உயரத்தில் பறக்கும் பட்டைத்தலை வாத்துகள் குளிர் காலத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இந்த குளத்துக்கு வலசை வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென திருப்பூரை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.

பொதுமக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் விழிப் புணர்வு ஏற்படுத்த பறவைகள்விளக்க மையம் ஏற்படுத்தப்படும், பறவைகள் குறித்த பாதுகாப்பு,ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் சரணாலயப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.

இதையடுத்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ‘ட்விட்டர்’ பதிவில் ‘தமிழகம் முழுவதும் பறவை ஆர்வலர்களின் நீண்டநாள்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, “திருப்பூர்நஞ்சராயன் குளம் பறவைகள்சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது, திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களுக்கும் மகிழ்ச்சியான தகவல். அதற்கான அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடுகள் பெறப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் வேகம் பெறத்தொடங்கியுள்ளன.

இதனை வரவேற்கிறோம். 181 வகையான பறவைகள், 42 வகையான பட்டாம்பூச்சிகள், 11 வகையான பாம்புகள், 7 வகையான தவளைகள், 74 வகையான மூலிகைச் செடிகளை கண்டறிந்துள்ளோம்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

மேலும்