இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

By விபின்

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு இப்போது மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி உள்ளிட்ட வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட வேளாண் பொருட்களை வாங்குவது குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் இயற்கை விவசாய விளை பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இயற்கை விவசாயம் என்பது வேதி இடுபொருட்கள் அல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களைச் சார்ந்ததாகும். அதனால் இயற்கை விவசாயம் பெருக, இயற்கையான இடுபொருட்கள் அவசியம். இந்த இடுபொருட்களைத் தயாரித்து வருபவர் வி. செந்தில்குமார்.

மதுரை அருகே விவசாயக் குடும்பத்தில் பிறந்த செந்தில்குமார், தங்களது நிலத்தில் பயன்படுத்திய வேதி உரங்களால் மண் வளம் கெட்டுப் போனதை அருகில் இருந்து பார்த்துள்ளார். அதனால் அதற்கு மாற்றாக இயற்கை வேளாண் வழிமுறைகளைத் தேடிப் பயணித்துள்ளார்.

நம்மாழ்வார் போன்ற வேளாண் அறிஞர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். இறுதியில் தானே இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி 2004-ல் ‘சத்யம் பயோ’ என்னும் இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் ‘சக்தி’ என்னும் பெயரில் இயற்கை உரம் தயாரித்துள்ளார். அதே பெயரில் கால்நடைத் தீவனங்களையும் இயற்கை உணவு வகையையும் தயாரித்து வருகிறார். இதற்காக மதுரைக்கு அருகில் இரு தொழிற்சாலைகளை இயக்கிவருகிறார்.

தங்களது தயாரிப்புகளை F3 ஆர்கானிக் மார்க்கெட்டிங் மூலம் அவர் சந்தைப்படுத்திவருகிறார். இதற்காகத் தமிழ்நாட்டில் பரவலாக 32 F3 ஆர்கானிக் மார்க்கெட்டிங் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள், உரம், கால்நடைத் தீவனம் போன்றவற்றை அவர்களது இடத்துக்கே கொண்டுபோய்த் தருகிறார். “Farmer, Feeding,Fertilizer இந்த மூன்று F-ம் இணைந்துதான் F3” என்கிறார் செந்தில்குமார்.

மேலும், இந்த F3 ஆர்கானிக் மார்க்கெட்டிங் மூலம் விவசாயிகளுக்கான ஆலோசனைகளையும் செந்தில்குமார் வழங்கிவருகிறார். “விவசாயிகளுக்கு மாநில, மத்திய அரசின் மானியங்கள், திட்டங்கள் குறித்துப் போதிய கவனம் இல்லை. அதனால் அவர்களது இடத்துக்கே எங்கள் களப்பணியாளர்கள் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவருகிறார்கள்.”

என்கிறார் செந்தில்குமார். இதற்காக இவரது நிறுவனத்தில் களப்பணியாளர்கள் 500 பேர் தமிழகம் முழுவதும் செயல்பட்டுவருகிறார்கள். இது மட்டுமல்லாது விவசாயிகளின் சந்தேகத்தைத் தீர்க்க ஒரு டெலி மார்க்கெட்டிங் உதவி மையத்தைத் தொடங்கியுள்ளார். “18004258055 என்ற டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்புகொண்டால் விவசாயிகளின் சந்தேகங்கள் தீர்த்துவைக்கப்படும்” என்கிறார் செந்தில்குமார்.

“நாங்கள் சக்தி சர்கா ஜெல்லி (SAKTHI SARGA JELLY) என்னும் பெயரில் ஒரு இயற்கைப் பொருளைக் கண்டுபிடித்துள்ளோம். இது பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நன்மை பயக்கும் பாக்டீரியாவை உருவாக்கக் கூடியது.

இந்தக் கண்டுபிடிப்புக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளோம்” என்கிறார் செந்தில்குமார். இது மட்டுமல்லாது சக்தி தயாநியூட்ரி, சக்தி எர்த் பவர், சக்தி க்ராப் டாப், சக்தி அஸ்கோ கிங், சக்தி சம்பூர்னா, சக்தி அமோகா, சக்தி சாயில் கோல்டு, சக்தி கோல்டு ஜெல் உள்ளிட்ட பல பொருட்களை சத்யம் பயோ நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

F3 ஆர்கானிக் மார்க்கெட்டிங் மூலம் தமிழகம் முழுவதும் 2 லட்சம் விவசாயிகள் இதுவரை பயன்பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் முழுமையாக F3 ஆர்கானிக் மார்க்கெட்டிங்கில் இணைந்துள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இப்போது சத்யம் பயோ நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையாகிவருகின்றன

வி.செந்தில்குமார், தொடர்புக்கு: 99441 18055வி. செந்தில்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

54 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

மேலும்