ஒ
ரு நாள் அலுவலக வண்டி நிறுத்துமிடத்தில், வண்டியை எடுப்பதற்கு முன்பாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இந்தக் குட்டி வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தேன். பொதுவாக இயற்கைக்கு மாறான பின்னணியில் இருக்கும் உயிரினங்களின் படங்கள், அவற்றைப் பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்தக்கூடும். அதேநேரம், இந்தக் குட்டி வண்ணத்துப்பூச்சி வாகனங்களில் எதைத் தேடி வந்தது என்று தெரியவில்லை. எனக்கு அன்றைக்கு அதன் அழகான தரிசனம் கிடைத்தது.
சிறிய வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆங்கிலத்தில் Skippers வகையின் கீழும் தமிழில் தாவிகள், துள்ளிகள் வகையின் கீழும் பகுக்கப்பட்டுள்ளன. இது Small Branded Swift, அறிவியல் பெயர் Pelopidas mathias. தமிழில் வயல் துள்ளி!
அதிவேகமாகப் பறக்கக் கூடியதால் ஆங்கிலத்தில் Swift என்ற பெயர். இதன் தோற்றுவளரி (larvae) நெற்பயிர், கரும்பு போன்ற புல் வகைத் தாவரங்களின் தோகையை அரித்து உண்ணக்கூடியது. அதன் காரணமாகத்தான் தமிழில் 'வயல் துள்ளி' என அழைக்கப்படுகிறது.
பொதுவாக பழுப்பு நிறம். கீழ்ப்புறம் வெளிறிக் காணப்படும். கீழ் இறக்கையின் பின் பக்கத்தில் அரை வட்ட வடிவில் ஏழு அல்லது எட்டு வெள்ளைப் புள்ளிகளால் இந்தத் துள்ளியை சட்டென்று அடையாளம் காணலாம். மேல் இறக்கையிலும் புள்ளிகள் காணப்படும்.
நாடெங்கும் சமவெளிப் பகுதிகளில் தென்படக் கூடியது. அதிவேகமாகப் பறக்கும் இந்தத் துள்ளி பயிர்கள், புல்வெளிகளில் அதிகம் காணப்படும். இதன் இறக்கையை விரித்தால் அதிகபட்சமே 4 செ.மீ. அகலம்தான் இருக்கும். மேல் இறக்கையையும் கீழ் இறக்கையையும் சற்றே மாறுபட்ட கோணத்தில் மடித்து வைத்து ஓய்வெடுக்கக் கூடியது.
நரந்தம் புல், தர்ப்பைப் புல், நெல், கரும்பு போன்றவற்றை இவற்றின் தோற்றுவளரிகள் உணவாகக் கொள்கின்றன. வளர்ந்த துள்ளிகள் பூக்களைத் தேடிப் பறக்கும். இறக்கைகளை மடித்து வைத்து பூந்தேனை உறிஞ்சும். தரையை ஒட்டி வேகமாகப் பறக்கும் இவற்றை மார்ச் தொடங்கி நவம்பர் மாதம்வரை காலையிலும் மாலையிலும் அதிகம் பார்க்கலாம்.
இவை வண்ணத்துப்பூச்சிகள் என்று அழைக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. வண்ணத்துப்பூச்சிகளின் உணர்கொம்புகளின் நுனி தடித்து இருக்கும். அதேநேரம் தாவிகள், துள்ளிகளின் உணர்கொம்புகளின் நுனி சின்னதாகக் கொக்கிபோல வளைந்திருக்கும். அத்துடன் தாவிகள், துள்ளிகளின் உடல் சிறியதாகவும் தடித்தும் இருக்கும். வண்ணத்துப்பூச்சிகளின் உடல் பெரிதாகவும் நீண்டும் இருக்கும்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago