* காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு விகிதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று அதிக மழைப்பொழிவு, வெள்ளம்; மற்றொன்று கடும் வறட்சி, தண்ணீர்த் தட்டுப்பாடு.
* அதிக வெள்ளம், கடும் வறட்சி இரண்டுமே இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மையைப் பாதிக்கின்றன. விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திப்பதோடு அவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது.
* காலநிலை மாற்றத்தால் தண்ணீர் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதோடு எளிய மக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது தடைபடுகிறது.
* அதிக வெள்ளத்தால் சில நேரம் கடலின் உப்புநீர், நன்னீர் நிலைகளில் ஊடுருவும் ஆபத்தும் ஏற்படுகிறது.
» கர்நாடக சட்டப்பேரவையை மீண்டும் உலுக்கிய ‘ஹனி டிராப்’ வலை: பாஜகவினர் அமளி
» மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மதுரை ஆட்சியரிடம் விவசாயி கண்ணீர் மல்க புகார்
* கடும் வறட்சி, அதிக வெள்ளம் போன்றவற்றால் சதுப்பு நிலம், ஆறுகள், கடற்கரையோரப் பகுதி களின் சூழல் அமைப்பு பாதிக்கப்படுவதோடு அவற்றின் உயிர்ப்பன்மையும் சிதைகிறது.
* அதிக வெள்ளத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்கள் வேறு பகுதிகளுக்குக் குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தொடர் மழை, வெள்ளத்தால் மண்ணின் நீர்ப்பிடிப்பு அதிகரித்து நிலச்சரிவு உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படுகின்றன.
* நீரினால் பரவும் நோய்களான காலரா, டைபாய்டு போன்ற நோய்த்தொற்றுகளுக்கு மக்கள் எளிதில் ஆளாகின்றனர்.
* புயல், வெள்ளம், கனமழை போன்றவற்றால் அடிப்படைக் கட்டுமானங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. உற்பத்தி யும் பாதிக்கப்பட்டு தனிநபர் வருமானமும் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றன.
* காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் நீர் மேலாண்மை, மீள்தன்மை கொண்ட கட்டமைப்பு வசதிகள், பேரிடர் கால மேலாண்மை போன்றவற்றை வலுப்படுத்த வேண்டும். - கிருஷ்ணி
| மார்ச் 22 - உலக நீர் நாள் |
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
16 days ago