உதகையில் பனிப் பொழிவு தொடக்கம்: கடும் குளிரால் மக்கள் அவதி

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் நீர் பனி கொட்டுவதால் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீர் பனி மற்றும் உரை பனி தாக்கம் இருக்கும். இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்த நிலையில் தற்போது பனிப் பொழிவு தொடங்கியுள்ளது. இன்று உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனி கொட்டியது. நீர் நிலைகள் அருகே உள்ள புல் தரை மைதானங்கள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, குதிரை பந்தய மைதானம், படகு இல்லம், போன்ற இடங்களில் நீர் பனி அதிகமாக காணப்பட்டது.

அதேபோல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீர் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. நீர் பனி காரணமாக கடும் குளிர் நிலவுவதால் நெருப்பை மூட்டி உதகை பொதுமக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர். உதகையில் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 10 டிகிரி செல்சியதாகவும் குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

மேலும்