அஜர்பைஜான்: அஜர்பைஜான் நாட்டில் நடைப்பெற்று வரும் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29) என்ற சர்வதேச மாநாட்டில் சத்குரு கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய சத்குரு, “நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை,” என்று கூறியுள்ளார்.
அஜர்பைஜானில் பாகு நகரத்தில் நவ.11ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள சத்குரு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மண் வளம் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசியது: “நாம் சூழலியல், காலநிலை ஆகியவற்றை பற்றி பேசும்போது இது மனித உயிர், வாழ்வாதாரம் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை முறை பற்றியது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புவுடையவை. இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் உயிர்போடு இருப்பதில் இருக்கிறது. நுண்ணுயிர், பூச்சி புழு மற்றும் மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால் நாம் வலிமையாக வாழ முடியாது.
நீண்ட காலமாக நிலம் பசுமை போர்வையின்றி தரிசாக விடப்படுவதால் அதிகமான உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன. இந்த போக்கு பூமியை அழித்துவிடும். உயிரினங்கள் என்று சொன்னால் நாம் பாண்டா, புலி மற்றும் டைனோசர்கள் பற்றி நினைக்கிறோம். ஆனால் அப்படி இல்லை நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை.
மண் அழிவு என்பது மிக தீவிரமான பிரச்சினை. ஆனால் இதை பற்றி யாரும் பேசுவதில்லை, கடந்த இரண்டு COP மாநாடுகளில் இதனை நாம் வலியுறுத்தி வருகிறோம்.பூமியில் உள்ள உயிரினங்களில் 60% மேலாக மண்ணுக்கு அடியில் உள்ளன. மேலும் 95% சதவிகித உயிர்கள் மண் மேல் செழித்து வளர்கின்றன. தற்போது இந்த மாநாட்டில் நாம் பசுமையான உலகத்தைப் பற்றி பேசுகிறோம். மண்ணில் விழும் ஒவ்வொரு கூடுதல் இலையும் காலநிலை தணிப்புக்கான ஒரு சிறிய படியாகும். மேலும் விவசாய நிலங்கள் ஒன்று மரங்கள், புதர்கள், மூடுப் பயிர்கள் என ஏதோவொரு வகையில் பசுமை போர்வையின் கீழ் வர வேண்டும்.
» ‘எல்ஐசி தலைப்புக்கு உங்கள் கணவர் செய்தது நியாயமா?’ - நயன்தாராவுக்கு இயக்குநர் குமரன் கேள்வி
» 2000-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை திறப்பு வீடியோ, புகைப்படங்களைக் கோரும் குமரி மாவட்ட நிர்வாகம்
நாம் தொடர்ந்து படிம எரிபொருள் பற்றி பேசுகிறோம். அது நடந்தாக வேண்டும். அந்த மாற்றம் தேவை தான். ஆனால் குறிப்பிடத்தகுந்த தொழில்நுட்ப புதுமை இல்லாமல் இது நிகழப் போவதில்லை. நீங்கள் விரும்புவதால் மட்டுமே இது நடந்துவிடாது. நானும் நீங்களும் கச்சா எண்ணெய் நல்லதல்ல என்று சொல்வதால் மட்டுமே இந்த உலகம் எண்ணெய் பயன்பாட்டை கை விட்டுவிடாது. சரியான மாற்று வழிகள் உருவாக வேண்டும்,” என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
20 hours ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
21 days ago
சுற்றுச்சூழல்
23 days ago