நாகர்கோவில்: கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி, மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டும் மையமாக குமரி மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், மலையோரங்கள் மாறி வருவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் அருகாமையில் உள்ள கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி, மானிய விலை மண்ணெண்ணெய், கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் சோதனை சாவடிகள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்பும் இத்தகைய கடத்தல்களை கட்டுபடுத்த முடியவில்லை. இந்த நிலையில், கேரளாவில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை பேணவும் அங்குள்ள அரசு உரிய கண்டிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் கூடிய விதிமுறைகளை வகுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கோழி, மீன், மற்றும் இறைச்சி, மருத்துவ, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளும் அங்கு கொட்டப்படுவதில்லை.
மாறாக வாகனங்கள் மூலம் கேரளாவின் அருகாமையில் உள்ள தமிழகத்தின் குமரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் அந்தக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. நான்கு வழிச்சாலை கரையோரம், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், நீர்நிலைகளில் இத்தகைய கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதோடு, சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகளால் அந்த நீரைப் பயன்படுத்துவோருக்கு பல்வேறு உடல் உபாதைகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
கேரளாவின் அருகாமைப் பகுதியான குமரி மாவட்டத்தில் இதுபோல் கழிவுகள் கொட்டப்படும் நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்கிறது. களியக்காவிளை, களியல், நெட்டா, காக்காவிளை மற்றும் குறுக்கு சாலைகள் வழியாக லாரிகளிலும், டெம்போக்களிலும் கொண்டு வந்து இறைச்சி, மீன், மற்றும் மருத்துவ கழிவுகளை இங்குள்ள நீர்நிலைகள், மலையோரங்கள், சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இதில் என்ன கொடுமை என்றால் இந்த வாகனங்களை ஓட்டி வருவது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தான். பணத்திற்காக மாவட்டத்தின் சுகாதாரத்தை கெடுக்க இவர்கள் துணை போவது வேதனையாக உள்ளது.
» தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு
» விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை - ஐகோர்ட் உத்தரவு
சமீபத்தில் களியக்காவிளையில் கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றிவந்த கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இது போன்று தொடரும் சம்பவங்களில் மக்களே வாகனங்களை மடக்கிபிடிப்பதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அபராதம் விதிப்பதும் சம்பிரதாயமாக நடந்து வருகிறது. ஆனால், இதனை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியாத நிலையே நீடிக்கிறது.
கேரளாவின் கழிவு பொருட்களை கொட்டி வரும் மையமாகவும், குப்பைத்தொட்டியாகவும் குமரி மாவட்டத்தின் எல்லை பகுதிகள் மாறிவரும் நிலையால் மக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் சங்கரபாண்டியின் கூறுகையில், “கேரளாவில் இருந்து, குமரி மாவட்டத்தில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் சம்பவங்களை தடுத்திடும் வகையில் இதில் ஈடுபடுவோருக்கு தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டம் வகுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு முடிவு கிடைக்கும். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
28 mins ago
சுற்றுச்சூழல்
52 mins ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago