திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி நிர்வாகமே குப்பை கொட்டி வருவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொசஸ்தலை ஆற்றில் திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலைஅருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சி நிர்வாகம்நீண்ட காலமாக குப்பை கொட்டி வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது:திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி. அழிஞ்சிவாக்கம், சிலம்பாத்தம்மன் நகர், இருளிப்பட்டு, ஜனப்பன்சத்திரம் - சாய் கிருபா நகர், கணேஷ் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய இந்த ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இருளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மீன்வலைகள், பிவிசி குழாய்கள் தயாரிக்கும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் இயங்கி வருகின்றன. ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலை பகுதிகளில் உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் நாள்தோறும் சுமார் ஒரு டன் குப்பை சேருகின்றன. அவ்வாறு சேரும் குப்பை, தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, டிராக்டர்வாயிலாக அழிஞ்சிவாக்கம் ஊராட்சி நிர்வாகம், ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றினுள் கொட்டி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த செயலால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
» சாலை அமைக்கும்போது பள்ளம், மேடான மேன்ஹோல்கள் - சென்னைவாசிகள் அச்சம்
» கும்பகோணம்: விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப் பணி; அமைச்சர் உதயநிதி தகவல்
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது: கொசஸ்தலை ஆற்றினால், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பூண்டி, சோழவரம், மீஞ்சூர் உள்ளிட்ட ஊராட்சிஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சிகள், திருவள்ளூர் நகராட்சிமற்றும் பெருநகர சென்னைமாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவை, கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் கணிசமான அளவில்பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கொசஸ்தலை ஆற்றில், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வருகிறது. ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.
இதனால், கொசஸ்தலை ஆற்றுக்கரையை ஒட்டியுள்ள சாய்கிருபா நகர், கணேஷ்நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், கொசஸ்தலை ஆற்றினுள் ஊராட்சிநிர்வாகம் குப்பை கொட்டும் இடத்தையொட்டி மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு, உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளுக்கு செல்பவர்கள், குப்பை குவியலில் இருந்துவரும் துர்நாற்றத்தால் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் குப்பையை அவ்வப்போது, ஊராட்சி நிர்வாகம் எரித்தும் வருவதால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
வடகிழக்கு பருவமழையின்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வரும் மழை நீராலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீராலும் நிரம்பும் பூண்டி நீர்தேக்கத்தின் உபரி நீரும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும்போது, ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் குப்பை உபரி நீரோடு கலந்து ஓடுவது வழக்கமாக உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மழைக் காலங்களில் கொசஸ்தலை ஆற்றில்பெருக்கெடுத்து ஓடும் நீரில் குப்பையும் கலந்துஓடுவதால், கொசஸ்தலை ஆற்றையொட்டி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு அடையும் அபாயம் இருக்கிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கொசஸ்தலை ஆற்றில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் இறைச்சி கடைகள், குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருவது தொடர்பாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
24 mins ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
24 days ago
சுற்றுச்சூழல்
24 days ago