சென்னை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை ஒழிப்பது, அதற்கு மாற்றாக மஞ்சப்பை விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க டிஜிட்டல் கண்காணிப்பு வழிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (SUP) உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றைத் தடைசெய்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல்தொடங்கிவைத்தார்.
அதன்படி, மாநிலம் முழுவதும்2.2 லட்சத்துக்கும் அதிகமானவிழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக்கின் பாதிப்புகள்மற்றும் சுற்றுச் சூழலுக்குஉகந்த மாற்றுப்பொருட்களின் நன்மைகளைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க முக்கிய தகவல்களுடன் கூடிய 19 அனிமேஷன்கல்வி வீடியோக்களையும் தயாரித்து, சுமார் 60,000 பள்ளிகள் மற்றும் 9 ஆதிதிராவிட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்தாண்டு அக்டோபரில் சென்னையில் மஞ்சப்பைபடைப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த படைப்பிரிவுவிழிப்புணர்வு நடவடிக்கைகளைமேற்கொள்வதுடன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான விதிமீறுபவர்களை கண்டறிந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க உறுதி செய்கிறது. அதனடிப்படையில், சென்னையில் இரண்டாவது மஞ்சப்பைப் படை கடந்த மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
» ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்த ஆட்சியிலேயே அமலாகும்: மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடக்கம்
பின்னர் ஆகஸ்ட்டில் ஊட்டி,கொடைக்கானல், கோயம்புத்தூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள்,சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களிலும் "பசுமைப் படை"விரிவுபடுத்தப்பட்டது. கூடுதலாக,கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டைமையமாக்கொண்டு மெரினா கடற்கரையில் நீலப்படை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநீலமற்றும் மஞ்சள் படைப்பிரிவுகள்சராசரியாக 74,000 கி.மீ. கடந்து,5,400-க்கும் மேற்பட்ட இடங்களைசென்றடைந்துள்ளன.
நவீன கருவிகள்: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான விதிமீறல்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், மஞ்சப்பை விற்பனை இயந்திர செயல்பாடுகள்,பசுமை படை மற்றும் கடற்கரை மையம் செயல்பாடுகள் பற்றியதரவுகள், ஆப்ஸ் அடிப்படையிலான கருவிகள் மூலம் கண்காணிக்க பிற டிஜிட்டல் கண்காணிப்புவழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது. இந்தத் தரவுகள் டிஜிட்டல் டாஷ்போர்டுகள் மூலம் தலைமையகத்தில் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டு, சிறந்த மேற்பார்வை மற்றும் சரியான நேரத்தில் தரவுகள் பெறுவதை உறுதி செய்கிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
18 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
19 days ago