உதகை: நடப்பாண்டுக்கான இரண்டாம் சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
மலைகளின் அரசியான உதகைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில், ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும்நடைபெறும். நடப்பாண்டுக்கான இரண்டாம் சீசனுக்கு 60 ரகங்களில், 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி, உதகை தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, தோட்டக்கலைத் துறைஇணை இயக்குநர் சிபிலா மேரிஉள்ளிட்டோர், மலர் நாற்றுகளை நடவுசெய்து தொடங்கிவைத்தனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரி கூறியதாவது: 1848-ல் மெக்ஐவர் என்பவரால் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டது. 176-வது ஆண்டான2024-ல், இரண்டாம் பருவமானது செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. இதை முன் னிட்டு, உதகை தாவரவியல் பூங்காவில் 2-ம் பருவ மலர்க்கண்காட்சிக்காக, செடிகள்நடவுப் பணி தொடங்கப்பட்டுஉள்ளது.
» பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை
கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே ஆகிய இடங்களிலிருந்து இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர்,வெர்பினா, ஜாபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பேன்சி, பெட்டூனியா, ஜினியா, ஸ்விட்வில்லியம், அஜிரேட்டம், கேலண்டுலா உட்பட 60 ரகங்களில் மலர் விதைகள் பெறப்பட்டு, சுமார் 5 லட்சம் வண்ண மலர்ச் செடி கள் நடவுப் பணியும், 15,000 மலர்த் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா ஆகிய 30 வகையான மலர்ச்செடிகள் நடவுப் பணியும் தொடங்கியுள்ளது.
நடப்பாண்டு 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மற்றும்பொதுமக்கள் பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
17 hours ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
22 days ago