வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று (ஜூலை 24) மாலை திடீரென காட்டுத்தீ பற்றியது. வத்திராயிருப்பில் இருந்து பார்க்கும்போது மலை உச்சியில் இருந்து புகை மூட்டமாக தெரிந்தது. இரவு நேரத்தில் காட்டுத்தீ அதிகமாக எரிவது தெரிந்தது. இது குறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு வனத்துறையினர் தீயை அணைப்பதற்காக வனப்பகுதிக்குள் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வருஷநாடு மலையை ஒட்டி உள்ள வத்திராயிருப்பு வனச்சரகம் பீட் எண்:3 கோட்ட மலையான் கோயில், பஞ்சம்தாங்கி பகுதியில் இன்று மாலை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. வனக் காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர் காட்டுத்தீயை அணைக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
19 days ago