கொடைக்கான‌ல் பகுதியில் பற்றி எரியும் காட்டு தீ

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ மேலும் பரவாமல் தடுக்க, வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மலைப் பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து கருகி வருகின்றன. இது எளிதில் தீப்பற்ற ஏதுவாக உள்ளது. இந்நிலையில், நேற்று பெருமாள் ம‌லை அருகே உள்ள தனியார் தோட்ட‌ம் ம‌ற்றும் வ‌ருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.

தீ தொடர்ந்து எரிந்து வருவதால், அருகேயுள்ள வ‌ன‌ப்ப‌குதிக‌ளில் ப‌ரவாமல் தடுக்கவும், தீயை கட்டுக்குள் கொண்டுவரவும் 10-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

மேலும்