உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்டுள்ள செய்தி: இந்த ஆண்டின் உலக தண்ணீர் தினத்துக்கான கருப்பொருள் என்னவெனில் ‘அமைதிக்கான நீர்.’ என்பதாகும். தண்ணீர் என்பது வாழ்க்கையுடன் ஆழமாக தொடர்புடையது. தண்ணீருக்கான சமஸ்கிருத வார்த்தையான அபா என்பது அன்பு அல்லது அன்பானவர் என்றும் பொருள்படும். அனைத்து முக்கிய பண்டைய நாகரிகங்களும் நதிக்கரைகள் அல்லது நதிகளில் செழித்து வளர்ந்தன. இந்தியாவில் கங்கை அல்லது யமுனை, எகிப்தில் நைல் அல்லது தென் அமெரிக்காவில் அமேசான் போன்றவை சில உதாரணங்கள்
நதிகளுடனான இந்தியாவின் கலாச்சார தொடர்பு ஆழமானது. ராமர் தனது வாழ்நாளை சரயு நதிக்கரையில் கழித்தார். கங்கை சிவபெருமானிடமிருந்து வெளிப்பட்டதாக சித்தரிக்கப் பட்டுள்ளது, மற்றும் யோகிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கங்கைக் கரையில் தியானம் செய்து வருகின்றனர். கங்கை அறிவைக் குறிக்கிறது ; யமுனை பக்தியைக் குறிக்கிறது. கிருஷ்ணர் மீது கோபியர்களின் அன்பும் பக்தியும் யமுனைக் கரையில்தான் மலர்ந்தன.
நமது நதிகளை உயிர்ப்பிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இங்கே நம்பிக்கை ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது. ஆறுகள், மலைகள், காடுகள் மற்றும் பிற நீர் ஆதாரங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலைக் கவனித்துக் கொள்ளவும், நேர்மையுடன் செயல்படவும் இந்த நம்பிக்கை மக்களை ஊக்குவிக்கும். நம்மிடம் சிறந்த கொள்கைகள் இருக்கலாம் , ஆனால் அந்த கொள்கைகளை செயல்படுத்த, அடிமட்டத்தில் உள்ளவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் இங்கு நம்பிக்கை சார்ந்த நிறுவனங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
நீரைப் பொருத்த வரை இந்தியாவை நேர்மறையாக மாற்றுதல் - அடித்தட்டு மக்களுடன் இணைந்து பணியாற்றுதல்: இந்த உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் முக்கியமானது. அதைத்தான் நாங்கள் இந்தியாவில் செய்து வருகிறோம். அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஒத்துழைப்போடு வருவாய் பதிவேடுகளில் மட்டுமே இருந்த 70-க்கும் மேற்பட்ட ஆறுகளுக்குப் புத்துயிர் அளித்தோம். இங்குள்ள வறண்ட ஆற்றுப் படுகைகள் சுரண்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. அதிகப்படியான நீர் வெள்ளத்தால் வீணானது; அல்லது பல மாதங்கள் முழு வறட்சி ஏற்பட்டது; பயிர்கள் வளர்ச்சியின்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.
வெளியில் ஒரு மாற்றத்தைக் காண்பதற்கு முன்பே, அந்த மாற்றம் தனக்குள்ளேயே வர வேண்டும். உங்கள் இதயம் திறந்தவுடன் உங்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. இப்படித்தான் எங்களது தன்னார்வலர்களின் நெட்வொர்க் பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. தாம் அனுபவித்த மகிழ்ச்சியால் மேலும் தூண்டப்பட்ட அவர்கள், சேவை செய்து அதே மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் கொண்டு வர முற்பட்டனர்.
எங்கள் தொண்டர்கள் அடிமட்டத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்றனர். அவர்கள் கிராம மக்களுக்கு உத்வேகம் அளித்து, தியானம், சுவாசப் பயிற்சி, யோகா ஆகியவற்றுடன் உள்ளிருந்து மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் இருக்கக் கற்றுக் கொடுத்தனர். அவர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான நிலத்தடி ரீசார்ஜ் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை சேமிக்கத் தொடங்கினர். காடுகளை வளர்ப்பது, அகாசியா மரங்கள் போன்ற நீரை அதிகமாக ஏற்கும் தாவர வகைகளை மாற்றி ஆற்றுப்படுகைகளில் மாமரங்கள் , அரச மரங்கள் போன்ற உள்நாட்டு மரங்களை நடுவது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
» மார்ச் 24-ல் குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி
» திமுகவில் 6 சிட்டிங் எம்.பி.க்களுக்கு சீட் மறுப்பு - காரணம் என்ன?
அதிசயம் என்னவென்றால், நில ஆய்வுகள் செய்து, ரீசார்ஜ் கட்டமைப்புகளை உருவாக்கி, மில்லியன் கணக்கான சரியான தாவரங்களை மீண்டும் நட்டு வளர்த்தபோது , ஆயிரக் கணக் கான நீர்நிலைகள், குளங்கள் புத்துயிர் பெற்றதைக் காண முடிந்தது. இன்று 70-க்கும் மேற்பட்ட ஆறுகளிலிருந்து வற்றாத நீர் ஐந்து இந்திய மாநிலங்களில் பாய்கின்றன. பறவைகள் திரும்பி வர ஆரம்பித்துவிட்டன, மேகங்களும் திரண்டு வரத் தொடங்கின.
கடந்த மே மாதம், விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாக இருக்கும் விதர்பா பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் விவசாயிகள், எங்கள் தன்னார்வலர்களின் பணியால் ஏற்பட்ட மாற்றத்துக்கு நன்றி சொல்ல, எங்கள் பெங்களூர் ஆசிரமத்துக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் முன்பை விட இப்போது நான்கு மடங்கு அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தனர் . இரண்டு ஆண்டுகளுக்குள் 19,500க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்துள்ளன
ஒரு நபர் தெளிவாகவும், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டவராகவும் இருக்கும்போது, அவர் உணர்திறன் உடையவராக மாறுகிறார். அவர் அக்கறையுடனும், பகிர்தலுடனும், உறுதி யுடனும் இருக்கிறார். இங்கு நம்பிக்கை அடிப்படையிலான அமைப்புகள் மக்களின் மன ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும், அவர்களை ஊக்குவிப்பதிலும், சேவை செய்யத் தூண்டுவதிலும், நமது நதிகளை மீண்டும் உயிர்ப்பிப்பதிலும், செழிப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைக் கொண்டுவருவதில் பெரும் பங்கு வகிக்க முடியும், என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
24 days ago
சுற்றுச்சூழல்
24 days ago
சுற்றுச்சூழல்
24 days ago