சிட்டுக்குருவி பாதுகாப்புத் திட்டம் 100-ல் இருந்து 300 கிராமங்களுக்கு விரிவாக்கம் - எஸ்எஸ்டி முன்முயற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி, உலகெங்கிலும் உள்ள பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஒன்று கூடி உலக சிட்டுக்குருவி தினம் என்ற நாளை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்டின் சிட்டுக் குருவி பாதுகாப்புத் திட்டம் 100 கிராமங்களிலிருந்து 300 கிராமங்கள் ஆக விரிவடைந்துள்ளது.

இது குறித்து சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் சுந்தரம் - க்ளேட்டன் லிமிடெட் ஆகியவற்றின் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாட்டு பிரிவான ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (Srinivasan Services Trust - SST), உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக் குருவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தனது முன்முயற்சிகளைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறது.

ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட், கடந்த ஆண்டு சிட்டுக்குருவி பாதுகாப்பு முன்முயற்சி திட்டத்தை 100 கிராமங்களில் மேற்கொண்டு வந்ததை, இந்த நிதியாண்டில் மேலும் 200 கிராமங்களுக்கு கூடுதலாக விரிவுபடுத்தியுள்ளது, இதன்மூலம் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிட்டுக்குருவிகளுக்கு உகந்த சூழலை உருவாக்க ஆயிரக்கணக்கான தனிப்பயனாக்கப்பட்ட கூடுகளை அப்பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வழங்குகிறது.

சிட்டுக்குருவி பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, சிட்டுக்குருவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் ஆதரவுடன் சமூக கூட்டங்கள் மற்றும் பேரணிகளை எஸ்எஸ்டி நடத்தி வருகிறது.

இவை தவிர, சிறு வயதிலிருந்தே சிட்டுக்குருவிகள் குறித்த விழிப்புணர்வு உருவாக வேண்டுமென்பதை உறுதிசெய்யும் வகையில் பள்ளிகளில் ஓவியப் போட்டிகளையும் எஸ்எஸ்டி தொடர்ந்து நடத்தி வருகிறது.. சிட்டுக்குருவிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் உள்ளூர் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, கிராமங்களில் உள்ள சிட்டுக்குருவி தன்னார்வலர்களையும் எஸ்எஸ்டி கண்டறிந்து வருகிறது.

தமிழகம், திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி வார்டு 10-ஐ சேர்ந்த பள்ளி மாணவி சந்தோஷி கூறுகையில், "எஸ்எஸ்டி, எங்களுக்கு சிட்டுக்குருவியை வளர்க்கும் கூடு ஒன்றை வழங்கியது. ஒரு சில நாட்களிலேயே சிட்டுக்குருவிகள் தன்னார்வத் தொண்டர்கள் வருகை தந்து சிட்டுக்குருவி கூட்டை வைத்து வளர்ப்பதற்கு சரியான இடத்தைக் கண்டறிய எங்களுக்கு உதவினார்கள். அடுத்த சில நாட்களிலேயே, சிட்டுக்குருவிகள் எங்கள் வீட்டிலிருந்து கூட்டில் அடிக்கடி வருவதைக் கவனித்தோம்.

நான் சிட்டுக்குருவிகளுக்கு. உணவை கூட்டின் அருகிலேயே வைக்க ஆரம்பித்தேன். அவை கொஞ்சம் கொஞ்சமாக அதை உண்ண ஆரம்பித்தன. இப்போது, குருவிகள் கூட்டில் முட்டையிட்டு இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கையின் இந்த அழகான சுழற்சி வெளிவருவதை அருகிருந்து பார்ப்பது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது’’ என்றார்.

தமிழகம், திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியின் திருக்குறுங்குடி கிராம வளர்ச்சி அலுவலர், எஸ்எஸ்டி - கிருஷ்ணவேணி கூறுகையில், "இதற்கு முன்பெல்லாம் கிராமங்களில் முதியோர்கள்தான் சிட்டுக்குருவி கூடு வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது சிறுவர்கள் சிறுமிகளும் வந்து என்னிடம் சிட்டுக்குருவி கூடுகள் கேட்டு வாங்கிச் செல்வது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து வருகிறது.

இந்த மாபெரும் மாற்றம், எங்கள் சிட்டுக்குருவி பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு நேர்மறையான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. மேலும் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பு மிக அவசியம் என்ற கருத்தை அவர்களின் மனதில் விதைப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்பதையும் இது குறிக்கிறது” என்றார்.

எஸ்.எஸ்.டி-யின் தலைவர் ஸ்வரன் சிங் [Swaran Singh, Chairman for SST] கூறுகையில், "சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பது ஒரு பணி மட்டுமல்ல, இது நம் அனைவருக்குமான ஒரு மாபெரும் பொறுப்பாகும். இந்த ஆண்டு எங்கள் விரிவுப்படுத்தப்பட்ட முயற்சிகளின் மூலம், நாங்கள் சிட்டுக்குருவி பாதுகாப்பில் சமூக ஈடுபாட்டையும், அவற்றை வளர்ப்பதில் மக்களிடையே அக்கறையையும் உருவாக்கி வருகிறோம். மக்களுக்கு அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது மிக முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.

இம்முயற்சியை முன்னெடுக்கும் வகையில் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பை முக்கிய பிராந்தியங்களில் நீண்ட கால முயற்சியை மேற்கொள்ள எஸ்.எஸ்.டி உறுதிபூண்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு எஸ்.எஸ்.டி மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது மேலும் எங்களது இந்த அடிமட்ட முயற்சிகள் சிட்டுக்குருவி பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எஸ்.எஸ்.டி நம்பிக்கை கொண்டுள்ளது’’ என்று கூறினார்.

சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (SST); டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் சுந்தரம்-க்ளேட்டன் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொரறுப்புணர்வுப் பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (SST) 1990-களின் மத்தியில் கிராமங்களில் தனது பணியைத் தொடங்கியது. மக்களுக்கான உதவிகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கி, அதன் அனைத்து திட்டங்களிலும் சமூகப் பங்கேற்பை மையமாகக் கொண்டு முதிர்ச்சியடைந்தது. இது கிராம மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த, முழுமையான மற்றும் பங்கேற்பு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. சமூகம் மற்றும் அரசுடன் மிகவும் நெருக்கமாக செயல்படுகிறது.

மொத்த சமூக ஈடுபாட்டின் மூலம் கிராமங்களில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதே எஸ்.எஸ்.டி-யின் நோக்கம் ஆகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டின் மூலம் சமுதாயத்தை வளர்ச்சி அடையச் செய்தல், தண்ணீரைப் பாதுகாத்தல், முழுமையான சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குவது போன்றவற்றின் மூலம் அரசு உள்கட்டமைப்பைப் புதுப்பித்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் இது முக்கிய கவனம் செலுத்துகிறது.

குறுந்தொழில்களை அமைக்க மக்களுக்கு உதவுவதன் மூலமும், விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலமான வருவாயை மேம்படுத்த உதவுவதன் மூலமும் சமூக- பொருளாதார வளர்ச்சியை நோக்கி எஸ்எஸ்டி செயல்படுகிறது. திட்டமிடுவது முதல் செயல்படுத்துவது வரை பங்கேற்பு அணுகுமுறையை உறுதி செய்வதன் மூலம் சமூகத்துக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதை நோக்கிய நடைமுறைகளைக் கொண்டு எஸ்.எஸ்.டி செயல்படுகிறது.

வலுவான பிணைப்பு மற்றும் சமூகத்தின் மத்தியில் உரிமை உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வலுவான சமூகத்தை உருவாக்குவதே எஸ்எஸ்டி-யின் நீண்ட கால இலக்காகும். மக்களிடையே மனப்பான்மை மாற்றத்திற்கு வழிவகுத்து, அதன் மூலம் கிராமங்களின் நிலையான வளர்ச்சியை எஸ்எஸ்டி ஊக்குவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

மேலும்