பழநி: பழநி அருகே கொடைக்கானல் சாலையில் இரவு நேரங்களில் ஒற்றை யானை உலா வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் செல்ல வத்தலகுண்டு மற்றும் பழநி வழியாக இரு பாதைகள் உள்ளன. இதில் பழநி வழியாக கொடைக்கானல் செல்லும் மலைப் பாதையில் தேக்கந் தோட்டப் பகுதியில் உணவு மற்றும் தண்ணீருக்காக ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. அந்த யானை இரவு நேரங்களில் சாலையை கடந்து பாலாறு பொருந்தலாறு அணைக்கும், தோட்டங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், வனப் பகுதியில் இருந்து சாலையை கடந்து குடிநீர் மற்றும் உணவு தேவைக்காக அணையை நோக்கி யானை செல்வது வழக்கம். யானை நடமாட்டத்தை வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் யானை, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டமும் இருப்பதால் சாலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். விலங்குகளை கண்டால் புகைப் படம் எடுப்பது, துன்புறுத்துவது போன்ற செயல் களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
18 days ago