50 ஆண்டுகளுக்கு பின்னர் ஜவளகிரி வனப்பகுதியில் இரு புலிகள் நடமாட்டம்

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஜவளகிரி வனப்பகுதியில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 2 புலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஓசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகாயினி கூறியதாவது: ஓசூர் வனக்கோட்டம் ஜவளகிரி வனப் பகுதியில் இரு ஆண் புலிகளின் நடமாட்டம் இருப்பது, வனத் துறை சார்பில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் ஒரு புலிக்கு 5 வயதும், மற்றொரு புலிக்கு 9 வயதும் இருக்கும்.

காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஜவளகிரி வனப் பகுதி உள்ளது. இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் புலிகளின் நடமாட்டம் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படு கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE