காட்டு யானையிடமிருந்து மயிரிழையில் தப்பிய சுற்றுலா பயணிகள்: ரிஸ்க் எடுக்க வேண்டாமென ஐஎஃப்எஸ் அதிகாரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காட்டு யானையிடமிருந்து சுற்றுலா பயணிகள் இருவர் மயிரிழையில் தப்பித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து எப்போதும் இதுபோல ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு இந்திய வனப்பணி அதிகாரி ஒருவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

கர்நாடகா - கேரளா எல்லையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் தான் இதயத்தை உறையச் செய்யும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், காட்டு வழியாக செல்லும் போது வழியில் காட்டு யானை ஒன்றைப் பார்த்ததும் காரில் இருந்து கீழே இறங்கிய இரண்டு ஆண்களைப் பார்த்து அந்த யானை எரிச்சலடைந்து அவர்களைத் துரத்தத் தொடங்குகிறது. யானையிடமிருந்து தப்பிப்பதற்காக இருவரும் பதற்றத்துடனும், வேகமாகவும் ஓடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் திடீரென தடுமாறி கீழே விழ, அவரை பின்னங்காலால் மிதிக்க முயற்சிக்கிறது யானை. அதிர்ஷ்டவசமாக அந்தத் தாக்குதலில் இருந்து அந்த நபர் தப்பித்துக் கொள்கிறார். இதனிடையே மனம் மாறிய யானை மீண்டும் வனத்துக்குள் திரும்பிச் செல்கிறது.

இந்த வீடியோவை இந்திய வனப்பணி அதிகாரியான பிரவீன் கேசவன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, காட்டுக்குள் செல்லும் போது வாகனங்களுக்குள்ளேயே இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது பதிவில், “அந்த நபர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி,. ஆனாலும் எப்போதும் இதுபோன்ற அபாயகரமான விஷயங்களில் ஈடுபடக்கூடாது. வனப்பகுதிகளுக்குள் செல்லும் போது வாகனங்களில் இறங்கவோ, வன விலங்குகளை நெருங்கிச் செல்லவோ வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் வனங்களுக்குள் செல்லும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தேவையையும், வனவிலங்குகளை மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்த உரையாடலுக்கும் வழிவகுத்துள்ளது. வனப்பகுதி வழியாக பயணிக்கும் போது வன உயிர்களைப் பார்த்து வாகனங்களை நிறுத்த வேண்டாம், அவைகளை நெருங்கி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும், இதுபோன்ற அத்துமீறல்கள் அடிக்கடி நிகழ்ந்து மனித விலங்கு மோதல்களுக்கு வழிவகுத்துவிடுவது வேதனையே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

23 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

மேலும்