பாரம்பரிய, உள்நாட்டு வாழை ஏற்றுமதியில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம்: தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி: நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு வாழை ரகங்களை ஏற்றுமதி செய்தால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டலாம் என தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.செல்வராஜன் தெரிவித்தார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் சார்பில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம் பாட்டு கருத்தரங்கு திருச்சியில் நேற்று நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் கு.சரவணன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார்.

கருத்தரங்கில், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.செல்வராஜன் பேசியது: தற்போது நம் நாட்டில் ஆண்டுக்கு 3.5 டன் வாழை ஏற்றுமதியாகிறது. இதில் 98 சதவீதம் ஜி-9 வாழை ரகங்கள் தான். நமது பாரம்பரிய, உள்நாட்டு ரகங்களை ஏற்றுமதி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படாதது வருத்தமான விஷயம்தான். அறுவடை செய்யப்படும் வாழையை 60 நாட்கள் வரை பச்சை மாறாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திடம் உள்ளது.

வாழையில் அதிக மகசூலைக் காட்டிலும் லாபத்தை அதிகரிப்பது தான் முக்கியமானது. விவசாயிகள் நல்ல லாபம் பெற சாகுபடிக்கு உகந்த சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பது முக்கியம். விவசாயிகள் அறுவடை செய்தவுடன், எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ, அங்கு கன்டெய்னரில் வாழை கொண்டு செல்லும்போதே அதை படிப்படியாக பழுக்க வைக்கும் தொழில்நுட்பத்தை தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஊக்குவித்து வருகிறது.

இந்த தொழில் நுட்பம் மூலம் வாகனத்தில் செல்லும் போதே வாழை பழுக்கத் தொடங்கி கீழே இறக்கும் போது, அவை விற்பனைக்கு தயாரான நிலையில் இருக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபமும், நுகர்வோருக்கு குறைந்த விலையிலும் பழங்கள் கிடைக்கும். உலகிலேயே வாழையை அதிக உற்பத்தி செய்யும் இந்தியா, ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியை மட்டுமே ஈட்டுகிறது. ஆனால், ஈக்வேடார் நாடு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடியை வாழை ஏற்றுமதி மூலம் ஈட்டுகிறது. நமது பாரம்பரிய மற்றும் உள்நாட்டு வாழை ரகங்களை ஏற்றுமதி செய்தால் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டலாம். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் எம்.சக்திவேல், வேளாண் துணை இயக்குநர்கள் ( வேளாண் வணிகம் ) எம்.சங்கரலட்சுமி ( புதுக்கோட்டை ), ந.கண்ணன் ( பெரம்பலூர் ) தோட்டக்கலை துணை இயக்குநர் பி.விமலா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் என்.எம்.மோகன் கார்த்திக், திருச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் ஆர்.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பேசினர்.

தஞ்சாவூர் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப நிறுவன முதல்வர் என்.வெங்கடாசலபதி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், வேளாண் விளைபொருட்களைக் கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.வேளாண்மை அலுவலர் ( வேளாண் வணிகம் ) ஜெ.நாகேஸ்வரி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

20 hours ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

29 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்