புயல், மழைநீர் தேக்கம் குறித்து ஆய்வு செய்ய பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் - சுற்றுச்சூழல் துறை செயலர்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநாட்டில், ‘காலநிலை மாற்றத்தைத் தழுவிய சுழற்சி பொருளாதாரம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு பேசியதாவது:

தொழிற்சாலைகளை பசுமை நிறைந்ததாக மாற்ற பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை ஸ்டுடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை காலநிலை மாடல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புயல் தாக்கத்தை அனுபவமாகக் கொண்டு, மழைப்பொழிவு, மழைநீர் தேக்கம் போன்றவை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக பிற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அங்குள்ள சிறப்பு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

செல்போன்கள் செயலிழந்து வீணாகினாலும், அதில் இருந்து லித்தியம், வெள்ளி போன்ற பொருட்களை பிரித்தெடுக்கலாம். இதற்காக சி்ங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE