முதன்முறையாக ட்ரோன்கள் மூலம் மார்ச், ஏப்ரலில் வரையாடுகள் கணக்கெடுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்.12-ம் தேதிநீலகிரி வரையாடுகள் திட்டத்தை அறிவித்திருந்தார். நீலகிரிவரையாடுகளை கணக்கெடுத்து, அவற்றின் எண்ணிக்கையை கண்டறிவது முக்கிய நோக்கமாகும். வால்பாறை, ஆனைமலைபுலிகள் காப்பகம் பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கும்.

நீலகிரி வரையாடுகள் திட்ட இயக்குநர் எம்.ஜி.கணேசன் தலைமையில் 25 ஆய்வாளர்கள் மற்றும் களஅலுவலர்கள் 3 நாட்களுக்கு ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் கிடைக்கும் 5 வகையான முறைகளில் ஒன்றை தேர்வு செய்து, வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையான வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் முதல்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE