பழநியில் பச்சை நிறமாக மாறிய கோடை கால நீர்த்தேக்கம்

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோடை கால நீர்த்தேக்கத்தில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழநி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக கொடைக்கானல் சாலையில் உள்ள கோடை கால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது. தொடர் மழையால் தற்போது கோடை கால நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது. இதில் இருந்து தினமும் நகராட்சி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கோடைகால நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திடீரென பச்சை நிறமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி சார்பில் குளோரினேஷன் செய்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்தாலும் பச்சை நிறத்தில் வருவதோடு, துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பழநி நகராட்சி ஆணையர் பால முருகன் கூறுகையில், கோடை கால நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள மரம், செடி கொடிகளின் பிரதிபலிப்புதான் தண்ணீர் பச்சை நிறத்தில் தெரிவதற்கு காரணம். இருப்பினும் நீர்த்தேக்க தண்ணீரை பரிசோதித்ததில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நீர்த்ததேக்கத்தில் இருந்து குடிநீரை குளோரினேட் செய்த பிறகே வீடுகளுக்கு விநியோகிக் கப்படுகிறது. அதனால் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE