நீலகிரி மாவட்டம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் கடும் குளிர்

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டம முழுவதும் பனிப்பொழிவு, மேகமூட்டம், சாரல் மழை என காலநிலை மாறி வருவதால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மூடுபனி நிலவியதால் உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள சாலைகளில், இருமார்க்கமாகவும் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர். தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடு பனியால் இருளாகவே காணப்படுகின்றன. தொடர்ந்து மாறி மாறி வரும் சீதோஷ்ண கால நிலையால், நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வெம்மை ஆடைகள், தொப்பி அணிந்தபடி இருந்ததை காண முடிந்தது. மேலும், குளிரில் இருந்து தப்ப ஆங்காங்கே தீ மூட்டி மக்கள் குளிர் காய்ந்தனர். சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாமல் தங்கும் விடுதிகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. உதகையில் நேற்று அதிகப் பட்ச வெப்ப நிலையாக 14 டிகிரி செல் சியஸும், குறைந்தப் பட்ச வெப்ப நிலையாக 6.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE