கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிட்கோ வளாகத்தில் நகராட்சி மற்றும் கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி வழியாகச் செல்லும் கால்வாயைப் பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினையால் சிட்கோ வளாகத்தில் குளம்போல சாக்கடை கழிவுநீர் தேங்கி, சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது. கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் சிட்கோ தொழில் மையமானது இரு நுழைவு வாயிலுடன் பல ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.
இதில் ஒரு நுழைவு வாயில் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பெங்களூரு சாலையிலும், இன்னொரு நுழைவு வாயில் கட்டிக்கானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி- சேலம் சாலையை ஒட்டிய பகுதியிலும் உள்ளது. இதனால், சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை கால்வாய், தெரு விளக்கு, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் நகராட்சி, ஊராட்சி மற்றும் சிட்கோ நிர்வாகம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், லண்டன்பேட்டை பகுதி (2)-க்கு உட்பட்ட 500-க்கும் அதிகமான குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் மற்றும் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் ஆகியவை சிட்கோ வளாகத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லைகள் வழியாக கால்வாயில் கடந்து சென்று புதூர் ஏரியில் கலக்கிறது.
கால்வாய் செல்லும் பகுதி நகராட்சி மற்றும் ஊராட்சி எல்லையில் இருப்பதால், எல்லை பிரச்சினை காரணமாகக் கால்வாயைப் பராமரிப்பதில் எல்லை பிரச்சினை தலைதூக்கி வருவதோடு, பராமரிப்பின்றி உள்ளது. மேலும், கழிவுநீர் மற்றும் உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக கழிவுநீர் வெளியேற முடியாமல் சிட்கோ வளாகத்துக்குள் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால், கழிவு நீரில் புழுக்கள், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது.
» சாலை பாதுகாப்பு விதிகளை மதிப்போருக்கு பரிசளிக்கும் ‘விழி’ @ கோவை
» சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு எதிராக டெல்லியில் இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம்
இதுதொடர்பாக சிட்கோவில் தொழில்நிறுவனம் நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கூறியதாவது: சிட்கோ வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்களுக்குத் தண்ணீர், மின்சாரம் வசதிக்காக சுமார் 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.
அங்கு திறந்தவெளியில் கிணறும், மின்மோட்டார் அறையும், 2 உயர்மின் அழுத்த மின்மாற்றிகளும் உள்ளன. இந்நிலையில், சிட்கோ வளாகத்தின் வழியாகச் செல்லும் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றியும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் திறந்தவெளியில் உள்ள கிணறு மற்றும் மின்மாற்றியை ஒட்டி தேங்கி வருகிறது. குறிப்பாக கிணறு முழுவதும் சாக்கடை கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், கிணற்று நீரை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, வருவாய் பதிவேடுகளில் உள்ளபடி மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்க, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி மற்றும் சிட்கோ நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மின்மாற்றி பழுதை சீரமைப்பதில் சிக்கல்: சிட்கோவில் திறந்த வெளிப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்மாற்றி மற்றும் அப்பகுதியில் உள்ள கம்பங்களைச் சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால், மின்மாற்றியில் பழுது ஏற்படும் காலங்களில் மின் ஊழியர்கள் கழிவுநீரில் நடந்து சென்று மின்மாற்றியின் பழுதை சீர் செய்ய வேண்டும் என்பதால், மின் ஊழியர்கள் பழுதை சரி செய்ய காலதாமதம் செய்வது அடிக்கடி நடந்து வருகிறது.
இதுபோன்ற நேரங்களில் மின் தடை ஏற்பட்டு தொழிற்சாலைகளில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், தொழில்முனைவோருக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
22 days ago