இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம். ஏனெனில்..!

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் வேளையில் இயற்கை வழி விவசாயத்தில் விளைந்த விளைபொருட்களை தகுந்த விலை கொடுத்து வாங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. நாட்டில் 65 சதவீத மக்கள் கிராமப் புறங்களில் வசிக்கிறார்கள். இதில் 47 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். விவசாயிகள், அனைவருக்கும் உண வளிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கும் வித்திடுகிறார்கள்.

அத்தகைய உழவர்களின் உன்னத தொழிலாம் வேளாண்மையை போற்றும் வகையில் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங்கின் பிறந்த நாளான டிச.23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். அடிப்படையில் விவசாய குடும்பத்தில் பிறந்து அரசியலிலும் சேவையாற்றி படிப்படியாக உயர்ந்தவர். அவர் பிரதமராக பதவியிலிருந்தபோதுதான் தற் போது நாம் கடைப்பிடிக்கும் திருந்திய வேளாண்மை தொழில்நுட்பக் கொள்கைகள் உருவாக் கப்பட்டன. விவசாயிகள் வாழ்வாதாரத்துக்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவை உருவாக்கினார். அவரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளுடன் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

சு.செந்தூர்குமரன்

இதுகுறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் மற்றும் விஞ்ஞானி சு.செந்தூர்குமரன் கூறியதாவது: 2023-ம் ஆண்டுக்கான விவசாயிகள் தினத்தின் கருப்பொருளாக ‘நிலையான உணவுப் பாது காப்பு மற்றும் யாவரும் எளிதில் பின் பற்றும் தீர்வுகளை வழங்குதல்’ என்ற தலைப்பு அறிவிக் கப்பட்டுள்ளது. உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு உதவிட நாம் 5 வகை கொள்கைகளை கடைப் பிடிக்க வேண்டும். முதலாவதாக இயற்கை வழி விவசாயத்தில் விளைந்த விளைபொருட்களுக்கு தகுந்த விலை கொடுத்து வாங்கி விவசாயிகளை ஊக்குவிக்கலாம். இரண் டவதாக பண்ணையிலிருந்து உணவுத்திண்ணை வரையிலான கட்டமைப்புகளை உருவாக்கி விவசாயிகளுக்கு உதவிடலாம்.

மூன்றாவதாக விவசாயிகளோடு அனைத்து துறையினரும் இணைந்து வேளாண் சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தி தொழில்நுட்பங்களை வேளாண் விஞ்ஞானிகளைக் கொண்டு வழங்க உதவிடலாம். நான்காவதாக வெற்றிபெற்ற விவசாயி களின் தொழில்நுட்பங்களை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றி பரப்புரை செய்யலாம். ஐந்தாவதாக விவசாயம் தெரியாதவர்களும் வீடுகளில் மாடித் தோட்டம், புறக்கடை காய்கறி தோட்டம், ஊட்டச் சத்துமிக்க காய்கறி தோட்டம், மூலிகைத்தோட்டம் செயல் படுத்தலாம். இதன் மூலம் களம் முதல் சந்தை வரையிலான விவசாயிகளின் சிரமங்கள் உணரப்பட்டு சரியான விலை கிடைக்க வகை ஏற்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு தொழில் பாதுகாப்பு கிடைப்பதோடு, அனை வருக்கும் இயற்கை வழி விளைந்த காய்கறிகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE