புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. அதில், நேரான வீதிகள் அடங்கிய ஒயிட் டவுன், பிரெஞ்சு கட்டிடங்கள் முக்கியமானவை. வெளிமாநிலத்தில் இருந்து வரும் பலரும் வீடியோ, புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட மறப்பதில்லை. மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமத்தை தரிசித்துவிட்டு வெளியே வந்தால் வரிசையாக சைக்கிள் ரிக்சாக்கள் காத்திருக்கும். இந்த சைக்கிள் ரிக்சாக்கள் ஒரு காலத்தில் பட்டையைக் கிளப்பியவை. தற்போது உள்ளூர் வாசிகள் சைக்கிள் ரிக்சாக்களை நாடுவதில்லை. அதே நேரத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டவர்கள் பலரும் சைக்கிள் ரிக்சாக்களை நாடி பயணிக்கின்றனர்.
வரலாற்றில் ஆர்வமுள்ள உள்ளூர்வாசிகள் ரிக்சா பயணங்களை சிலாகித்து சொல்ல மறப்பதில்லை, “முன்பெல்லாம் நூற்றுக்கணக்கில் ரிக்சாக்கள் இருக்கும். அதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற சொல்தாக்கள்தான் அதிகளவில் பயணிப்பார்கள். அலங்கரித்த ரிக்சாவில் செல் போட்ட டேப்ரிக்கார்டரில் பாடல் கேட்டபடி செல்வார்கள். வழியில் தெரிந்தவர்கள் வந்தால் நின்று பேசிய பிறகுதான் ரிக்சா நகரும். தற்போது வாழ்க்கை வேகமாக நகருகிறது. இதனால் பலரும் ரசிப்பு தன்மையை இழந்துவிட்டனர். ரசிக்க வேண்டுமானால் வேகத்தை சற்று குறைப்பதுதான் சிறந்தது. தற்போதும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் அவர்களின் தேர்வு சைக்கிள் ரிக்சா தான். அதில்தான் ஒயிட் டவுன் ஏரியாவை வலம் வருவர். நாம் அதை இழந்து விட்டோம்” என்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ரிக்சா ஓட்ட நகராட்சி உரிமம் தேவை. உரிமம் இல்லாமல் பயணித்தால் ரூ. 5 அபராதம் அப்போது விதிக்கப்படும். ரிக்சா முகப்பில் விளக்கு எரிய வேண்டும். காற்றில் விளக்கு அணைந்தாலும் அபராதம் உண்டு என்ற தகவல்களையும் தருகின்றனர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள். இதுபற்றி வெளிநாட்டவர்களிடம் கேட்டதற்கு, “ஒயிட் டவுனில் அழகான கட்டிடங்கள், வீதி அமைப்பு, கோயில், ஆசிரமம், தேவாலயம் என பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைந்துள்ளன. சுற்றுலாவில் வேகமாக நிறைய இடங்கள் பார்த்தால் மனதில் நிறையாது. ரசித்தபடி தென்றலைப் போல் மெதுவாக மிதந்து சென்றால்தான் பார்க்கும் விஷயங்களும் இடங்களும் நினைவில் பதியும். அதற்கு சைக்கிள் ரிக்சாதான் சிறப்பு. வேறு எங்கும் ரிக்சாவை பார்க்க முடிவதில்லை. ரிக்சாவில் பயணிப்பது சிறந்த அனுபவம்” என்கின்றனர்.
நகரில் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அரசு ஆண்டுதோறும் நிதியுதவி தருவதைப்போல் சுற்றுலா பயணிகளை கவரும் ரிக்சாவையும் அரசு காக்கலாம் என்ற யோசனையையும் பல சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ரசிப்புத் தன்மையை தூண்டும் ரிக்சா பயணம் வெளிநாட்டவருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மகிழ்வைத் தரும் சூழலில், அதை ஓட்டுவோர் வாழ்க்கையோ அதலபாதாளத்தில் கிடக்கிறது. ரிக்சா ஓட்டுநர்கள் தங்கள் மனதில் உள்ளதை கூறுகையில், “சிறிய நகரான புதுச்சேரியில் ரிக்சாவுக்கு முன்பு தனி மவுசு இருந்தது. சுற்றுலா பயணிகள் வந்தால்தான் வருவாய் கிடைக்கும்.
» “கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு விஜய், அஜித் வருவார்கள்” - தேனாண்டாள் முரளி நம்பிக்கை
» ’1.25 மில்லியன் ரசிகர்கள்’ - உலக சாதனையாக மாறிய உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர்
ஆட்டோ, டெம்போ அதிகரிப்பால் நம் ஊர்மக்கள் பலரும் ரிக்சாவை விரும்புவதில்லை. தற்போது ரிக்சா ஓட்டும் தலைமுறையோடு இத்தொழில் மறைந்துவிடும். இதற்கு உடல் உழைப்பே மூலதனம். தற்போது வெளிமாநிலத்தில் இருந்து வருவோரும், வெளிநாட்டவர்கள் மட்டுமே விரும்பி பயணிக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்கு நகரை சுற்றிக்காட்டினால் ரூ.300 வரை கிடைக்கும். இந்த சவாரி தினமும் கிடைப்பது அரிது. வாரத்தில் இரண்டு சவாரி கிடைத்தாலே அதிர்ஷ்டம். வருமானம் இல்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனம் எங்களுடைய ரிக்சா.
அரசின் சுற்றுச்சூழல் துறை, சுற்றுலாத்துறை மனது வைத்தால் சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் எங்களால் பெரிதும் பங்களிப்பு செய்ய முடியும். அரசுதான் உதவ வேண்டும். உள்ளூர் மக்களும் எங்கள் வாகனத்தை பயன்படுத்தினால் எங்கள் வாழ்வும் இயங்கும்” என்கின்றனர் நம்பிக்கையுடன். புதுச்சேரி முழுக்க ஆயிரக்கணக்கில் ஓடிய சைக்கிள் ரிக்சாக்கள், வாகன பெருக்கத்தால் சுருங்கி தற்போது ஒயிட் டவுனில் மட்டுமே 50-க்குள்தான் ஓடுகின்றன. ரிக்சாவை பாதுகாத்து சுற்றுலா வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
17 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
19 days ago